பக்கம் எண் :

பக்கம் : 409
 
சடிமன்னன் மரீசியின் கருத்தைக் குறிப்பாலுணர்தல்
575. தொகுத்த மாண்புடைத் தூதன் மன்னவன்
வகுத்த மாமணித் தலத்தின் மேன்மனத்
தகத்தி னாலமர்ந் திருப்ப வாங்கவன
முகத்தி னாற்பொருண் முடிவு கண்ணினான்.
 

     (இ - ள்.) தொகுத்த - தூதர்க்கு அமையற்பாலன என நூலோர்களால் தொகுத்துக்
கூறப்பட்ட, மாண்புடை - மாட்சிமைகளனைத்தும் தன்பாலுள்ள, தூதன் - தூதனாகிய மரீசி,
மன்னவன் - அரசன், வகுத்த - குறிப்பால் காட்டிய, மாமணித் தலத்தின்மேல் - சிறந்த
மணிகள்பதித்த இருக்கையின் கண், மனத்து அகத்தினால் - மனத்தினுள் நிறைந்த
மகிழ்ச்சியுடனே. அமர்ந்து இருப்ப - இனிதாக அமர்ந்திருக்க, ஆங்கு அவன் -
அவ்விடத்தே அம் மரீசியினுடைய, முகத்தினால் - முகத்தின்கண் விளங்கித் தோன்றும்
மெய்ப்பாடு முதலிய குறிகளால், பொருள் முடிவு - அவன் அகத்தே உள்ள பொருளின்
முடிவுகளை, கண்ணினான் - மன்னவன் ஆராய்ந்து அறிந்து கொண்டான், (எ - று.)

தான் வகுத்துக் கூறுவான், கூறியது கூறுவான், (ஓலைகொடுத்து நிற்பாள்) எனத் தூதுவர்
பலவகைப்படுவர். அவருள் தான் வகுத்துக் கூறும் தலையாய தூதன் மரீசி என்பார்,
தொகுத்த மாண்புடைத்தூதன் என்றார்.

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் (திருக் - குறிப். 9)


என்பவாகலின். மனமகிழ்ச்சியோடே அமர்ந்திருந்த தூதன் மெய்ப்பாடு கண்டு இவன்
நற்செய்தியே கொண்டுவந்துள்ளான் என்று சடி ஊகித்துணர்ந்து கொண்டான் என்க.

( 3 )

இதுவுமது
576. தூத னின்முகப் பொலிவி னாற்சுடர்க்
காது வேலினான் கமரு முற்றுற
ஓதி ஞானிபோ லுணர்ந்த பின்னது
கோதில் கேள்வியான் றொழுது கூறினான்.  

      (இ - ள்.) தூதனின் - தூதனாகிய மரீசியினடைய, முகப் பொலிவினால் - முகத்திற்
றோன்றிய குறிப்புக்களின் விளக்கத்தால், காது சுடர் வேலினான் - கொலைத்
தொழிலையுடைய ஒளிவீசும் வேற்படை ஏந்திய சடி மன்னன், கருமம் - காரியங்கள்,
முற்றுற - முழுவதும் பொருந்த, ஓதிஞானிபோல் - பிறர் உளக்கருத்தை அவர் ஓதாமலே
உணர்ந்துரைக்கும் கடவுட்டன்மை