பக்கம் எண் :

பக்கம் : 543
 

புல்லினான் - ஒப்பற்ற தனது மலையனைய மார்பகத்தினுள் அவ்விரு மக்களும் பொருந்தி
ஒடுங்குமாறு தழீஇக் கொண்டான், (எ - று.)

பயாபதி விசயதிவிட்டர்களைத் தனது மார்பின் ஒடுங்குமாறு இருகை களாலும் தழீஇக்
கொண்டான் என்பதாம்.
 

( 249 )

 
822. மான 1வா மதகளிற் றுழவன் மக்கடந்
தேனவாஞ் செழுமலர் செறிந்த குஞ்சியுட்
கானமா மலர்த்துகள் கழுமி வீழ்ந்தன
வானவாந் தடக்கையான் மகிழ்ந்து நோக்கினான்.
 

      (இ - ள்.) வான் அவாம் தடக்கையான் - முகிலும் விரும்புதற்குக் காரணமான
வள்ளன்மையுடைய பெரிய கைகளையுடையனாகிய, மான் அவாம் மழகளிற்று உழவன் -
மானம் பேணலையுடைய மதமிக்க யானைகளைக் கொண்டு பகைப் புலத்தை உழுகின்ற
உழவனாகிய பயாபதி வேந்தன், மக்கள் தம் - தன் மக்களுடைய, தேன் அவாம் செழுமலர்
- வண்டுகள் விழைகின்ற செழித்த மலர்கள், செறிந்த குஞ்சியுள் - துதைந்த
தலைமயிர்க்கற்றையுள், கானமா மலர்த்துகள் கழுமி வீழ்ந்தன - காட்டகத்தே யுள்ள சிறந்த
மலர்கள் உகுத்த பூந்தாதுகள் செறிய வீழ்ந்தவற்றை, மகிழ்ந்து நோக்கினான் - மிகுந்த
உவகையோடே பார்த்தான், (எ - று.)

     “கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
     றிரப்புமோர் ஏஎர் உடைத்து“ (திருக். 1053)

     என்பவாகலின், கரப்பிலா நெஞ்சிற் கடனறிவானாகிய பயாபதியின் பால் இரத்தற்கு
முகிலும் அவாவும் என்றார்.

     பயாபதி மன்னன் விசயதிவிட்டரின் குஞ்சியில் காட்டுப் பூக்களின் தாதுகள் படிந்து
விளங்குதலை மகிழ்ந்து கண்டான் என்க.
 

( 250 )

 
823. என்னைநும் மீரலர்க் குஞ்சி தம்முளித்
துன்னிய வனத்துக டுதைந்த வாறென
மன்னவ னருளலு மகர வார்குழை
மின்னிவர் மணிக்கழல் விசயன் செப்பினான்.
 

     (இ - ள்.) நும் ஈர் அலர்க் குஞ்சி தம்முள் - உம்முடைய ஈரமுடைய மலர்துதைந்த
மயில் முடியில், இத் துன்னிய வனத்துகள் துதைந்த ஆறு என்னை? என - செறிந்த
வனத்தின்கண் உளதாய இப்பூந்துகள் படிதற்கு வழி யாது? என்று; மன்னவன் அருளலும் -
பயாபதி வேந்தன் கேட்டருளலும், மகரவார்குழைமின் இவர் மணிக்கழல் விசயன்
செப்பினான் -


     (பாடம்) 1. மானவா மக்களிற்.