மகரமீன் வடிவினவாய் இயற்றிய நெடிய குண்டலங்களை அணிந்தவனும் ஒளி தவழும் அழகிய வீரக்கழலையுடையவனுமாகிய விசயன் என்பான் கூறுவானாயினான், (எ - று.) பயாபதி வேந்தன் மக்களை நோக்கி நுங்கள் தலையின்கண் காட்டுப் பூவின் தாதுகள் காணப்படுமாறென்னை? யென விசயன் விளம்புவான் என்க. |
( 251 ) |
விசயன் தந்தைக்குத் திவிட்டன் அரிமாவினை அழித்தமை விளம்பல் |
824. | போற்றிநம் புறணிசூழ் காடு பாழ்செய்வான் சீற்றமிக் குடையதோர் சீயஞ் 1சேர்ந்தது வேற்றுவன் றமர்கள்வந் துரைப்ப வெம்பியிவ் வாற்றல்சா லடியன்சென் றதனை நீக்கினான். |
(இ - ள்.) போற்றி - தந்தையே எம்மைப் போற்றியருள்க! நம் புறணிசூழ் காடு பாழ் செய்வான் - நமது மேட்டு நிலம் சூழ்ந்த காட்டகத்தை அழிக்கும் பொருட்டு, சீற்றம் மிக்குடையது ஓர் செய்கண்சீயம் சேர்ந்தது - சினம் மிகுந்ததாகிய சிவந்த கண்களையுடைய ஓர் அரிமா எங்கிருந்தோ வந்து சேர்ந்தது, வேற்றுவன் தமர்கள் வந்துரைப்ப - அச்செய்தியை நம் பகைவனாகிய அச்சுவகண்டனுக்குத் தமராய தூதுவர் வந்து எமக்கு அறிவிக்க, எம்பி இவவாற்றல் சால்அடியன் - என் அருமைத்தம்பியும் ஆற்றல் மிக்கவனும் தங்கள் அடியவனும் ஆகிய இத்திவிட்டநம்பி, சென்று அதனை நீக்கினான் - போய் அவ்வரிமாவைக் கொன்று அவ்விடுக்கணைப் போக்கினான், (எ - று.) தந்தையே! நம்புறணி சூழ் காடு பாழ்செய்வான் ஓர் அரிமா எய்திற்று; அதனை உரைப்ப, இவ்வாற்றல்சால் திவிட்டன் சென்று கொன்றான் என்றான், என்க. |
( 252 ) |
பயாபதியின் கழி பேருவகை |
825. | யானுமங் கிவனொடு மடிக 2ளேகினன் வானுய ரிமகிரி 3மருங்கி லென்றுபூந் தேனுய ரலங்கலான் சிறுவன் சொல்லலுந் தானுயிர் தளிர்ப்பதோர் சவிய னாயினான். |
(இ - ள்.) அடிகள் - அடிகேள்!, வான்உயர் இமகிரி மருங்கில் - வான் அளாவ உயர்ந்த இமயமலையின் சாரலில், யானும் இங்கு இவனொடும் ஏகினன் - அடியேனும் இத்திவிட்டனோடு சென்றேன், என்று பூந்தேனுயர் |
|
|
(பாடம்) 1. சேர்ந்தென. 2. சென்றனன். 3. மருங்கு லென்ற. |