பக்கம் எண் :

பக்கம் : 545
 

     அலங்கலான் சிறுவன் செப்பலும் - என்றின்னணம் அழகிய தேன்மிக்க
மாலையையுடைய விசயன் கூறியவுடனே, தான் உயிர் தளிர்ப்பதோர் சவியன் ஆயினான் -
அரசன் தன் உயிர் இன்பத்தால் தழைக்கத் தகுந்த ஓர் ஒளிபடைத்தவன் ஆனான்,
(எ - று.)

திவிட்டனோடே அடியேனும் சென்றேன் என்று விசயன்கூற, அவ்வெற்றியைக் கேட்டுப்
பயாபதி விம்மிதமடைந்தான் என்பதாம்.
 

( 253 )

 
826. சுடரொளி மிகுசோதி சூழ்கழற் காளை மார்தம்
1அடரொளி முடிமன்ன னோவலா னாய்பொன் னாகத்
தொடரொளி 2சுடர்ஞாயிற் சூளிகை 3சூழ நெற்றிப்
படரொளி நெடுவாயிற் 4பள்ளியம் பலங்கள் சேர்ந்தார்.
 

      (இ - ள்.) சுடர் ஒளிமிகு சோதிசூழ் கழற் காளைமார் - சுடரும் ஒளிமிக்க கதிர்கள்
சூழ்ந்த வீரக்கழலை அணிந்த விசயதிவிட்டர்கள், தம் அடர் ஒளி முடிமன்னன் ஏவலான் -
தம் தந்தையாகிய, செறிந்த ஒளியை யுடைய முடிமன்னனாகிய பயாபதி வேந்தனுடைய
ஏவல்பெற்று, ஆய்பொன் நாகம் தொடர் ஒளிசுடர் - ஆராய்ந்த பொன்மலையை
ஒப்பத்தொடர்ந்து ஒளிவீசுகின்ற, ஞாயில் சூளிகை சூழும் நெற்றி - குருவித்தலை, உப்பரிகை
முதலிய மதிலுறுப்புக்கள் சூழந்த உச்சியினையுடையனவும், படர்ஒளி நெடுவாயில் -
படருகின்ற ஒளியையுடையனவுமாகிய நிண்ட வாயில்களையும் உடைய, பள்ளியம்பலங்கள்
சேர்ந்தார்,-பள்ளிமன்றங்களை எய்தினார், (எ- று.)

     பள்ளியம்பலம் - துயிலுதற்குரிய மன்றம். பின்னர் நம்பிமார் பயாபதி மன்னன்பால்
விடைபெற்று, நெடிய வாயிலையுடைய பள்ளி மன்றங்களை எய்தினர் என்க.
 

( 254 )

ஏழாவது சீயவதைச் சருக்கம் முற்றிற்று.


     (பாடம்) 1. படரொளி. 2. சுடருநாயிற். 3. சூல. 4. பல்லிம்யம்பலங்கள்.