பக்கம் எண் :

பக்கம் : 546
 

எட்டாவது
கல்யாணச் சருக்கம்
 

     இது. திவிட்டநம்பிக்கும், சுயம்பிரபைக்கும் நிகழ்ந்த திருமண நிகழ்ச்சியைக் கூறும்
பகுதியாம். இதன்கண், திவிட்டன் அரிமாவைக் கொன்ற செய்தியை ஒற்றரால் உணர்ந்த
சடிமன்னன், தன் மகளாகிய சுயம்பிரபையைத் திவிட்டனுக்கு மணஞ்செய்விக்கக் கருதுதலும்,
தன் கீழுள்ள விச்சாதர வேந்தர் எண்மரை அழைத்து அரசுகாவலை அவர்பால்
ஒப்புவித்தலும், பின்னர் உரிமைச் சுற்றமும் அமைச்சரும் படையும் நண்பரும் புடைசூழச்
சுயம்பிரபையை விமானத் தேற்றிக்கொண்டு போதனத்தை எய்துதலும், சடியின் வருகை
அறிந்த பயாபதி பெருஞ் சிறப்புடன் எதிர்கொண்டு வரவேற்று அளவளாதலும், சடிமன்னன்
முதலியோர் ஒரு பூம்பொழிலில் அமைக்கப்பட்ட பொன் மாளிகையில் வதிதலும், ஆங்கு
அமிர்தபிரபை சுயம்பிரபைக்குத் திவிட்டநம்பியைக் காட்டுதலும், சுயம்பிரபையின் வேட்கை
நிலையும், மாதவசேனை சுயம்பிரம்பையின் உருவத்தை ஓவியத்தே வரைந்து திவிட்டனுக்குக்
காட்டுதலும், திவிட்டனது காமவேட்கையின் இயல்பும், பயாபதி அருகக் கடவுளுக்கு விழா
வயர்தலும், திவிட்டனுக்கும் சுயம்பிரபைக்கும் திருமண நிகழ்த்தலும், இருவர்தம் இன்ப
நிலையும் பிறவும் கூறப்படும்.

 

புலவர் தோற்றுவாய் செய்தல்
827. செங்கண்மால் சிங்கம் வென்று செழுமலர்த் திலதக் கண்ணித்
திங் 1கண்மா வண்ண னோடுந் திருநகர் பெயர்ந்த பின்னை
அங்கண்மாற் குரிய நங்கை யரும்பெற லவட்குத் தாதை
வெங்கண் 2மால் களிறன் னான்றன் றிறமினி விளம்ப லுற்றேன்.
 

      (இ - ள்.) செங்கண்மால் - சிவந்த கண்களையுடைய திருமாலாகிய திவிட்டன்,
சிங்கம் வென்று - அரிமாவைக் கொன்று, செழுமலர் திலதம் கண்ணி - செழித்த
மலரானியன்ற உயரிய தலை மாலையையுடைய, திங்கள் மாவண்ணனோடும் - திங்கள்
போன்ற சிறந்த வெண்மையான நிறம் உடைய விசயனுடனே, திருநகர் பெயர்ந்த பின்னை -
அழகிய போதன நகரத்தை அடைந்த பிறகு, அங்கண் மாற்கு உரிய நங்கை - அழகிய
கண்களையுடைய அத்திவிட்டனுக்கு மண உரிமையை உடையவளான சுயம்பிரபை என்னும்,
அரும்பெறல் அவட்கு - பெறுதற்கரியளாகிய அந் நங்கைக்கு, தாதை - தந்தையாகிய,
வெங்கண்மால் களிறு அன்னான்றன் - வெவ்விய கண்களையுடைய பெரிய யானையை
ஒத்த சுவலனசடி என்னும்

     (பாடம்) 1. திங்கள் வாள் - திங்களவ் வண்ணனோடும். 2. மால் களிற்றினான்.
செங்கண்மால் - சிவந்த கண்களையுடைய திருமாலாகிய திவிட்டன், சிங்கம் வென்று -
அரிமாவைக் கொன்று, செழுமலர் திலதம் கண்ணி - செழித்த மலரானியன்ற உயரிய தலை
மாலையையுடைய, திங்கள் மாவண்ணனோடும் - திங்கள் போன்ற சிறந்த வெண்மையான
நிறம் உடைய விசயனுடனே, திருநகர் பெயர்ந்த பின்னை - அழகிய போதன நகரத்தை
அடைந்த பிறகு, அங்கண் மாற்கு உரிய நங்கை - அழகிய கண்களையுடைய
அத்திவிட்டனுக்கு மண உரிமையை உடையவளானசுயம்பிரபை என்னும், அரும்பெறல்
அவட்கு - பெறுதற்கரியளாகிய அந் நங்கைக்கு, தாதை - தந்தையாகிய,
வெங்கண்மால்களிறு அன்னான்றன் - வெவ்விய கண்களையுடைய பெரிய யானையை ஒத்த
சுவலனசடி என்னும்
 


     (பாடம்) 1. திங்கள் வாள் - திங்களவ் வண்ணனோடும். 2. மால் களிற்றினான்.