பக்கம் : 972 | | கும் இயல்புடைய, விஞ்சை வேந்தர் - விச்சாதர மன்னர், நூற்று ஒருபதின்மர் - நூற்றுப் பதின்மர், தாழ - தனக்கடங்கி வணங்கா நிற்பவும், கைஅமை திகிரியானை - கையின்கட் பொருந்திய ஆழியை உடைய திவிட்டநம்பியை, காமனே - காமவேள் ஒருவன்மட்டுமே, கலவிக்கின்றான் - பொருது கலக்கங் காண்பானாயினன், (எ - று.) தெய்வங்கள் புறங்காப்பவும், மன்னர் வணங்கவும், விஞ்சையர் தாழவும் காமன் மட்டுமே நம்பியைக் கலக்கங் காண்பவன் ஆயினான் என்க. கையமை திகிரியானை - என்றது, கையின்கட்டிகிரியுடையனாதலையும் அஞ்சாமல் காமன் கலவிக்கின்றான் என்றொரு குறிப்புத் தோன்றக்கூறிய படியாம். | (429) | | திவிட்டநம்பியின் காமவின்பம் | 1460. | மன்னவர் மகளி ரீரெண் ணாயிரர் மயிலொ டொப்பா ரன்னவ ரமிர்தச் செப்பே ரணிமுலைக் குவடு பாயப் பின்னிய தாது மல்கப் 1பில்கிய தேம்பெய் மாரி துன்னிய சுரும்பொ டேங்கத் துணருடை கின்ற வன்றே. | (இ - ள்.) மன்னவர் மகளிர் ஈர்எண்ணாயிரர் - வேந்தர் மகளிராகிய தன் மனைவியர் பதினாறாயிரவர், மயிலொடு ஒப்பார் - மயில் போன்ற சாயலையுடையோர், அன்னவர் - அம்மனைவிமார்களின், அமிழ்தச் செப்பு ஏர் அணிமுலைக் குவடு பாய - அமிழ்தம் பெய்துவைத்த செப்பை ஒத்த அழகுடைய ஒப்பனை செய்யப்பட்ட முலையின் முகடுகள் தாக்குதலாலே, துணர் - திவிட்டநம்பி மார்பிலணிந்துள்ள கொத்தாகிய மலர்கள், பின்னிய தாது மல்க - தம்மொடு பிணைந்துள்ள பூந்துகள்கள் பெருகுமாறும், பில்கிய தேம் பெய் மாரி - கொப்புளித்த தேனாகிய பெய்கின்ற மழை, துன்னிய சுரும்போடு ஏங்க - மொய்த்த வண்டுகளுடனே முழங்குமாறும், உடைகின்ற அன்றே - நெகிழலாயின, அன்று, ஏ :அசைகன், (எ - று.) துணர் பாய மல்க ஏங்க உடைகின்ற என்க. இதனாற் கலவி கூறிற்று. தன் தேவிமாராகிய மன்னர்மகளிர்கள் பதினாறாயிரவருடைய முலைக்குவடு பாய்தலாலே, நம்பியின் மார்பிலணிந்த துணர்தாது மல்க, ஏங்க, உடைந்தன என்க. | (430) | |
| (பாடம்) 1 பிலங்கிய. | | |
|
|