(இ
- ள்.) இ இடத்து உள விலங்கு இறந்த - இந்தக்
காட்டிலுள்ள மிருகங்களெல்லாம் இறந்து போயின, எறி வேல்
பிழைத்தும் வலை பீறியும் - எறியப்பட்ட வேல்களுக்குத் தப்பியும்
வலைகளைக் கிழித்தும், வெவ்விடக் கணைகள் தப்பியும் -
கொடுமையான விடந்தோய்க்கப்பெற்ற கணைகளுக்குப் பிழைத்தும்,
சில விலங்கு போக உள ஆயினும் - சில மிருகங்கள்
ஓடிப்போயிருந்தாலும், அவ்விடத்தினில் நடப்பதோ? -
அவ்விடங்களுக்கு நடந்து செல்வதோ? புகுவதோ - காட்டுக்குள்
நுழைவதோ, நகரி அணைவதோ - அயோத்தி நகருக்கு உங்களுடன்
வருவதோ?, எவ்விடத்து இனிது சேர்த்தும் - எந்த இடத்திற்கு
மகிழ்ச்சியோடு வருவோம், என்றுஅவர் விளம்ப - என்று அவ்
வேடர்கள் கேட்க, மன்னவன் இயம்புவான் - அரிச்சந்திரன் கூறுவான்.
எறி
வேல் : வினைத்தொகை : ஓகாரம் : வினா, சேர்தும்
தம்மைப் பன்மை வினைமுற்று. வேடர்கள் 'நாங்கள் இனிமேல் எங்குச்
சென்று என்ன செய்யவேண்டும்' என்று அரிச்சந்திரனை வினவினர்,
எப்போது அவன் கூறுவான் என்பது.
(30)
551. |
சென்ற
சென்றதிசை தோறும்யா மினிது
சென்று திண்டிறல் விலங்கெலாம்
கொன்று கொன்றவை முடிந்த பின்வருத
லாகு முன்னிய குறிப்பெனக்
கென்று தேரின்மிசை ஏறியே இறைவ
னேக லுங்கழல் இறைஞ்சியே
நின்ற வேடுவர் பெரும்ப டைத்திர
ணெருங்கு கானிடைப் பரந்தவே. |
(இ - ள்.)
திண் திறல் விலங்கெலாம் - மிகுந்த வன்மையுடைய
மிருகங்களெல்லாம், சென்ற சென்ற திசை தோறும் - அவை போன
போன திக்குகளில் எல்லாம், யாம் இனிது சென்று - நாமும்
இனிமையாகத் தொடர்ந்து போய், கொன்று கொன்று - அவற்றை
எல்லாம் கொன்று, அவை முடிந்தபின் - அவை எல்லாம் இறந்த பின்பு,
வருதலாகும் - நாங்கள் நாட்டிற்கு வருதல் தக்கது, முன்னிய குறிப்பு
எனக்கு என்று - இஃதே எனக்குத் தோன்றிய கருத்து என்று, தேரின்
மிசை ஏறியே இறைவன் ஏகலும் - தேரில் ஏறிக்கொண்டே அரசன்
சொல்லிச் செல்லலும், கழல் இறைஞ்சியே நின்ற வேடுவர் - அவன்
திருவடிகளைத் தொழுதுகொண்டே நின்ற வேடர்களும், பெரும் படைத்
திரள் - பெரிய படைக் கூட்டங்களும், நெருங்கு கானிடைப் பரந்த -
அடர்ந்த காட்டிற்குள் பரவிச் சென்றார்கள்.
அடுக்குகள் பன்மைபற்றி வந்தன; திண்டிறல்; பண்புத்தொகை;
விலங்கு : சாதியொருமை. வேடுவர் படைத் திரள் : உம்மைத்தொகை.
அரசன் கூறிய குறிப்பைக் கேட்டு அவன் குறிப்பின் வழியே
வேடுவர்களும் கானகத்திற் பரவிச் சென்றார்கள் என்பது.
(31)
|