அல்லின்
என்பது அலின் எனத் தொகுத்தலாயிற்று, இது
தொகுத்தல் விகாரம்.நனி : உரிச்சொல், இறந்துபட்ட பிணங்களின்
குவியல்களிலிருந்து வெளியேறி ஓடமுடியாமல் உயிருள்ள
விலங்குகளும் அங்கங்கே நின்றன என்பது.
(28)
549. |
பட்ட
பட்டவை எடுத்து வேடுவர்
பருத்த கட்டைகள் அடுக்கியே
சுட்ட சுட்டதசை தின்று தின்றுறு
சுணங்கி னம்பல பிணங்கவே
மட்ட றப்பருகி இட்ட ளித்திலர்
மடுக்க ளிற்புன லருந்தியே
இட்ட மாலைபுனை மன்னர் மன்னவன்
இருந்த சூழலிடை எய்தினார். |
(இ - ள்.) பட்ட பட்டவை எடுத்து
- இவ்வாறு இறந்த இறந்த
மிருகங்களையெல்லாம் எடுத்து, வேடுவர் - வேடர்கள், பருத்த
கட்டைகள் அடுக்கிச் சுட்ட சுட்ட தசை தின்று தின்று - பெரிய
கட்டைகளை அடுக்கிச் சுட்டு இறைச்சிகளை மேலும் மேலும் தின்று,
உறுசுணங்கினம் பல பிணங்க - வந்து பொருந்திய நாய்க்கூட்டங்கள்
பல தம்முள் சண்டையிடும்படி, மட்டு அறப் பருகி - கள்ளை
மிகுதியாகக் குடித்து, இட்டு அளித்திலர் மடுக்களில் புனல் அருத்தி -
நாய்களுக்குக் கொடுக்காதவர்களாகித் தாமே தின்று குளங்களிலுள்ள
நீரைக் குடித்து, இட்ட மாலை புனை மன்னர் மன்னவன் இருந்த
சூழலிடை எய்தினார் - தான் விரும்பிய வாகைமாலையணிந்த
பேரரசனாகிய அரிச்சந்திரன் இருந்த பக்கம் வந்தார்கள்.
மடுக்களின் நீர் குடித்தல் - குடிமயக்கம் தீர்தற்பொருட்டு,
அடுக்குகள் பன்மைபற்றி வந்தன; அளித்திலர் : முற்றெச்சம்;
சுணங்கினம் பல பிணங்கவே இட்டு அளித்திலர் மட்டறப் பருகி எனக்
கூட்டுக.
(29)
'தப்பி ஓடின மிருகங்களை நாடிச்செல்வதா அயோத்திக்கு
வருவதா'
என்று
வேடர் அரசனை வினவல்
550. |
இவ்வி
டத்துளவி லங்கி றந்தவெறி
வேல்பி ழைத்தும்வலை பீறியும்
வெவ்லி டக்கணைக டப்பி யும்சில
விலங்கு போனஉள ஆயினும்
அவ்வி டத்தினில்ந டப்ப தோஅடலி
புகுவ தோநகரி அணைவதோ
எவ்வி டத்தினிது சேர்தும் என்றவர்
விளம்ப மன்னவன் இயம்புவான். |
|