547. |
துடைக
ளற்றன சிரங்கள் பற்பல
துணிந்து வீழ்ந்தகை துமிந்தன
இடைக ளற்றகுட ரோடி யற்றன
எழுந்து தாவும்அடி அற்றன
நடைக ளற்றனநி ணந்தெ றித்தன
நரம்பு மூளைகள் கழன்றன
கடையு கத்தில்எழு கடலெ னக்குருதி
ககன மீதுறஎ ழுந்ததே. |
(இ
- ள்.) துடைகள் அற்றன - பல மிருகங்களின் துடைகள்
அறுபட்டன, பற்பல சிரங்கள் துணிந்து வீழ்ந்த - பல பல
மிருகங்களின் தலைகள் துணிபட்டு விழுந்தன, கை துமிந்தன - பல
மிருகங்களின் கைகள் அறுபட்டன, இடைகள் அற்ற - பல
மிருகங்களின் இடுப்புகள் அறுபட்டன, குடரோடி அற்றன - குடல்கள்
ஓடி ஓடிச் சென்றதனால் அறுந்து விழுந்தன, எழுந்து தாவும் அடி
அற்றன - எழுந்து தாவுகிற காலடிகள் அறுபட்டன, நடைகள் அற்றன
- பல மிருகங்கள் காலொடிந்து நடையற்று விழுந்தன. நிணம்
தெறித்தன - பல மிருகங்களின் கொழுப்புகள் சிந்தின, நரம்பு
மூளைகள் கழன்றன - பல மிருகங்களுக்கு நரம்புகளும் மூளைகளும்
கழன்று வெளிவந்தன, கடை உகததில் எழு கடலென - கடை
ஊழிக்காலத்தில் பொங்கி யெழுகின்ற ஏழு கடல்கள் போல, குருதி
ககனமீது உற எழுந்தது - இரத்தமானது ஆகாயத்தில் பொருந்தும்படி
மிகுந்து உயர்ந்து பொங்கியது.
குடல்
குடர் என வந்தது போலி, ஓடியதால் குடரற்றன என்க
அடி : பால்பகா அஃறிணைப்பெயர்: எழு கடல் : வினைத்தொகை.
ஏகாரம் :
ஈற்றசை.
(27)
548. |
அலினு
டற்களிறு நனிம டிந்துபிடி
அகல்வ தற்கும்வழி யற்றன
புலயு டன்கரடி யுழைம டிந்துகலை
போவ தற்கும்வகை யற்றன
எலிஅ ழுங்கணி லிறந்தி றந்துமுய
லேகுதற் கும்இட மற்றன
வலிய சிங்கமுட னாளி யிற்றுமரை
வருவ தற்குநெறி யற்றவே. |
(இ - ள்.)
அலின் உடற் களிறு நனி மடிந்து - இருட்டை ஒத்த
ஆண் யானைகள் மிகவும் இறந்து, பிடி அகல்வதற்கும் வழி அற்றன -
பெண் யானைகள் விட்டுப் பிரிவதற்கும் வழியின்றித் திகைத்தன,
புலியுடன் கரடி உழை மடிந்து - புலிகளும் கரடிகளும் மான்களும்
இறந்து, கலை போவதற்கும் வகை அற்றன - கலைமான்கள்
போவதற்கும் இடமின்றியிருந்தன, எலி அழுங்கு அணில் இறந்து
இறந்து - எலிகளும் அழுங்குகளும் அணில்களும் மேலும் மேலும்
மடிந்து, முயல் ஏகுதற்கும் இடம் அற்றன - முயல் போவதற்கும் இடம்
இல்லை யாயிற்று, வலிய சிங்கம் உடன் ஆளி இற்று - வலிய
சிங்கங்களும் ஆளிகளும் இறந்து, மரை வருவதற்கும் நெறி அற்ற
- மான்கள் வருவதற்கும் வழியில்லாது போயின.
|