பக்கம் எண் :


323

பணிகளும் துகிலும் பொன்னும் பெறற்கியாம்                         படர்ந்தேம்அல்லேம்
திணிசுடர் முடியாய் யாங்கள் தேடிய பரிசில் கேளாய்.

     (இ - ள்.) மணியொடு கடகம் செம் பொன் வளை எரிமணிப்
பொன் ஆரம் - மாணிக்க மணிகள் பதிக்கப்பெற்ற கடகங்களையும்
செம்பொன்னால் செய்த வளையல்களையும் நெருப்புப்போல் ஒளி வீசும்
மணிகள் பதித்த மாலைகளையும், அணி துகில் பிறவும் நீட்டிக்
கொண்ம் என அளித்தலோடும் - அழகிய ஆடைகளையும் மற்றும்
உள்ள சிறந்த பொருள்களையும் நீட்டி எடுத்துக்கொள்ளுங்கள் என
மன்னன் அளித்த போது, பணிகளும் துகிலும் பொன்னும் பெறற்கு
யாம் படர்ந்தேம் அல்லேம் - அணிகளையும் ஆடைகளையும்
பொன்னையும் பெறுவதற்கு யாம் இங்கு வந்தோம் அல்லோம், திணி
சுடர் முடியாய் யாங்கள் தேடிய பரிசில் கேளாய் - உறுதியான ஒளி
வீசும் முடிமன்னனே! யாங்கள் பெற விரும்பிவந்த பரிசிலைக்
கேட்பாயாக (என்றார்).

     கொள்ளும் என்பது 'கொண்ம்' என விகாரப்பட்டது மகரக்
குறுக்கம். பெறற்கு + யாம் = பெறற்கியாம்; குற்றியலிகரம். நாங்கள்
நாடிவந்த பரிசில் வேறு; அதனைக் கூறுகின்றோம்; அப்பரிசிலை
யளிப்பாய் எங்கட்கு என்பது குறிப்பு.
                                                    (31)

 
650. ஏத்திய பரிசி லாளர்க் கெண்ணிய அனைத்தும் நல்கும்
பார்த்திவ இவை எலாம்நின் றிருவுளப் படியால் உள்ளேம்
மூர்த்திகண் மூவர்க் காகும் முடிபுனை அந்நா ளேநீ
சாத்திய தவளக் கொற்றக கவிகையைத் தருதி என்றார்.

     (இ - ள்.) ஏத்திய பரிசிலாளர்க்கு எண்ணிய அனைத்தும்
நல்கும் பார்த்திவ - புகழ்ந்து வாழ்த்தும் பரிசில் பெறுவோர்க்கு அவர்
நினைத்தவை எல்லாவற்றையும் கொடுக்கும் மன்னனே, இவை எலாம்
நின் திருவுளப்படியால் உள்ளோம் - இவை எல்லாவற்றையும் நின்
மனக்கருத்தின்படி பெற்றுள்ளோம், மூர்த்திகள் மூவர்க்கு ஆகும்
முடிபுனை அந்நாளே - பிரமன் திருமால் உருத்திரன் என்னும் மும்
மூர்த்திகளும் புனைதற்கேற்ற முடியினைச் சூட்டிக்கொண்ட அந்
நாளிலேயே, நீ சாத்திய தவளக் கொற்றக் கவிகையைத் தருதி என்றார்
- நீ கவித்துக் கொண்டுள்ள முத்துக்களாலாகிய வெற்றிக்குடையைத்
தருவாய் என்றார்.

     மும்மூர்த்திகளும் புனைதற்கேற்ற முடி என்றதனால் மன்னனுடைய
பெருமை கூறப்பட்டது. நீ முடிபுனைந்த காலத்தில் கவிக்கப்பட்ட
வெண்குடையைப் பரிசிலாக எமக்குக் கொடு; அதுவே நாங்கள்
வேண்டுவது என்றார்.
                                                    (32)

 
651. பழிவழி ஒழுகா நீதிப் பானுவின் குலத்து வேந்தர்
வழிவழி வந்த கொற்றக் கவிகையை வழங்க மாட்டேன்
விழிவழி கண்ட வேறு கவிகையை விளம்பில் உங்கள்
மொழிவழி தருவேன் என்று மொழிந்தனன் மன்னர் கோமான்.