(இ
- ள்.) மஞ்சு அலம்பு இடியேறு என்ன மா முரசு அதிரும்
ஓசைக்கு - மேகங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து உண்டாகும் பேரிடி
போல முழங்குகின்ற முரசங்களின் ஓசைக்கு, அஞ்சலால் அனந்த கோடி
அசுணமா அனைத்தும் - அஞ்சுதலினால் பலகோடி அசுணம் என்னும்
விலங்குகள் எல்லாம், ஆவி துஞ்சலாது ஈண்டி மொய்க்க - தம்முயிர்
நீங்காது நிலைத்திருக்கவேண்டி இசை பாடும் இவ்விடத்தில் நெருங்கி
மொய்த்து நிற்க, தும்புரு முதலோர் எல்லாம் - தும்புரு என்னும் இசை
முனிவர் முதலியோர் யாவரும், இன் சொலின் ஓசை எய்த - இனிய
சொற்களோடு கூடிய இசையைக் கேட்டலால், யாழ் இசை யாது என்று
ஓர்வார் - இந்த யாழின் இசை எங்கிருந்து வருகின்றது என்று
ஆராயத்தொடங்கினர்.
அசுணம்
பறவை என்றும் விலங்கு என்றும் இருவகையாக
நூல்களிற் கூறப்பட்டுள்ளன. ஈண்டு அசுணமா எனலால், விலங்கு
எனவே கொள்ளுதல் வேண்டும். அசுணம் என்பது இசை கேட்டு
இன்புற்று மயங்கிக்கிடக்கும் தன்மையுடையது. அதனைப் பிடிக்க
விரும்பும் வேடர் முதலியோர் முதலில் யாழ் கொண்டு இசை மீட்டி
அது மயங்கியபோது பறை முதலியவற்றை ஒலித்து அச்சுறுத்திப்
பிடிப்பது வழக்கம். ஈண்டு முரசு ஒலி கேட்டு அஞ்சி அசுணங்கள்
யாழிசை நிகழும் இடத்தில் நெருங்கி வந்து சேர்ந்தன என்பது கருத்து.
(29)
648. |
நல்லியன்
மகர யாழின் நாதமும் மிடறும் ஒன்றப்
புல்லிய கீத ஒசை செவிவழிப் புகுத லோடும்
வல்லியர் தம்மை நோக்கி மலர்த்திருக் கரம்அ மைத்து
மெல்லியல் தானும் வெற்றி வேந்தனும் மிகம கிழ்ந்தார். |
(இ - ள்.)
நல் இயல் மகர யாழின் நாதமும் - நல்ல இசைநூல்
இலக்கணத்திற்குப் பொருந்திய மகர யாழின் ஓசையும், மிடறும் ஒன்றப்
புல்லிய கீத ஓசை செவிவழி புகுதலோடும் - கண்டத்தினின்று வந்த
ஓசையும் ஒன்றாகக்கலந்த இன்னிசை ஒலி தம் செவிகளில் கேட்டவுடன்,
மெல்லியல் தானும் வெற்றி வேந்தனும் - மென்மைத் தன்மையுடைய
சந்திரவதியும் வெற்றியுடைய அரிச்சந்திர மன்னனும், வல்லியர் தம்மை
நோக்கி மலர்த்திருக் கரம் அமைத்து - வல்லிக்கொடி போன்ற
பெண்களைப் பார்த்துத் தம் மலர்க்கரங்களால் வாழ்த்தி ஆமோதித்து,
மிக மகிழ்ந்தார் - மிக்க மகிழ்ச்சியடைந்தார்கள்.
யாழ் ஓசையும் மிடற்று ஓசையும் ஒத்து வருதல் இசையின்
சிறப்பு.
யாழொலியா மிடற்றொலியா என்று வேற்றுமையறிய வியலாதவாறு
இசைபாடுவது சிறப்பு. காந்தருவத்தை இசை பாடியபோது கேட்டவர்
யாவரும் "இருங்கடிப் பவளச் செவ்வாய் திறந்திவள் பாடினாளோ,
நரம்பொடு வீணை நாவி னவின்றதோ வென்று நைந்தார்" என்று
திருத்தக்கதேவர் சிந்தாமணியிற் கூறியதும் காண்க.
(30)
649. |
மணியொடு
கடகம் செம்பொன் வளைஎரி மணிப்பொன் னாரம்
அணிதுகில் பிறவு நீட்டிக் கொண்மென அளித்த லோடும் |
|