|
பட்டவாள்
வீர ரெல்லாம் உய்வகை பலித்த தென்பார்
வட்டமா மதியம் அன்ன வதனத்தார் பாடல் கேட்டே. |
(இ
- ள்.) வட்டமா மதியம் அன்ன வதனத்தார் பாடல் கேட்டு
- வட்டமான சந்திரனைப் போன்ற முகத்தையுடைய பெண்கள் பாடிய
பாடலைக் கேட்டு, அட்டமா அனைத்தும் புள்ளும் ஆவி பெற்று ஏகும்
என்பார் - நாம் கொன்ற விலங்குகளும் பறவைகளும் உயிர்பெற்று
எழுந்து செல்லும் என்பார்கள், சுட்டநீள் வனங்களெல்லாம்
சோலையாதத் தழைக்கும் என்பார் - நாம் கொளுத்திய நீண்ட காடுகள்
எல்லாம் மறுபடியும் சோலைகளாகத் தழைத்து வளரும் என்பார்கள்,
பட்ட வாள் வீரர் எல்லாம் உய்வகை பலித்தது என்பார் - இறந்த நம்
வாள் வீரர் எல்லோரும் உயிர் பிழைக்கும் வகை வந்து கிடைத்தது
என்று கூறுவர்.
விலங்கு,
பறவை, மரம், மக்கள் முதலிய யாவும் உயிர்பெற்றெழச்
செய்யும் ஆற்றல் வாய்ந்தது இவ்விசை என்பது கருத்து.
"நாம்
கொன்ற விலங்கும் புள்ளும் உயிர்பெற்றெழும்; வெந்த
காடுகள் பூங்காவனமாகும்; இறந்த வீரர்களும் உயிர்பெற்றெழுவார்"
என்று கேட்டவர் யாவரும் புகழ்ந்து கூறினர்.
(27)
646. |
நாடெலாம்
அழிக்கக் கேட்டு நரபதி வெகுண்டு வேட்டை
ஆடலால் வெருண்டு போய்த்தம் மாருயி ரோம்பித் துன்றும்
காடெலாம் கரந்த மாக்கள் கன்னியர் மதுர கீதப்
பாடலால் வெளிப்பட்டுற்ற பறவையும் பறந்த அம்மா. |
(இ - ள்.)
நாடு எலாம் அழிக்கக் கேட்டு - விலங்குகள்
நாட்டினுள் புகுந்து மன்னுயிர்களை அழித்தலைக் கேள்விப்பட்டு, நரபதி
வெகுண்டு வேட்டை ஆடலால் - மன்னன் சினம்கொண்டு வேட்டை
யாடுதலினால், வெருண்டு போய்த் தம் ஆருயிர் ஓம்பி - அஞ்சி ஓடித்
தம்முடைய அரிய உயிரைப் பாதுகாத்துக்கொண்டு, துன்றும் காடு எலாம்
கரந்த மாக்கள் - நெருங்கிய காட்டின்கண் ஒளிந்துகொண்ட விலங்குகள்
எல்லாம், கன்னியர் மதுர கீதப் பாடலால் வெளிப்பட்டு உற்ற -
பெண்களின் இனிய இசைப்பாடலால் தம்மை மறந்து வெளியில் வந்தன,
பறவையும் பறந்த அம்மா - பறவைகளும் பறந்தன.
அம்மா : அசைச்சொல். வியப்பிடைச்சொல்லும்
ஆம். மக்கள் -
மனிதர். மாக்கள் - விலங்குகள். பறந்த : படர்க்கைப்பன்மை
வினைமுற்று. அரசன் வேட்டையாடுதலைக் கண்டு அஞ்சி ஒளிந்திருந்த
விலங்குகளும் பறவைகளும் இம் மகளி ரிசை கேட்டவுடன் வெளியேறி
இசை கேட்க வந்தன என்பது.
(28)
647. |
மஞ்சலம்
பிடியே றென்ன மாமுர சதிரும் ஒசைக்(கு)
அஞ்சலால் அனந்த கோடி அசுணமா அனைத்தும் ஆவி
துஞ்சலா தீண்டி மொய்க்கத் தும்புரு முதலோ ரெல்லாம்
இன்சொலி னோசை எய்த யாழிசை யாதென் றோர்வார். |
|