பக்கம் எண் :


320

வரும்பனி மதியை நோக்கிக் கிண்கிணி வாய்கொண் டார்ப்பின்
அரும்பவி ழாமற் போதுள் வண்டிருந் தார்ப்ப தென்ன.

     (இ - ள்.) கரும்பினைக் கடிந்த தீஞ்சொல் - கரும்பைச்
சுவையால் வென்ற இனிய சொற்களையும், காரினைக் கடிந்த கூந்தல் -
கருமை நிறத்தால் மேகத்தை வென்ற கூந்தலையும், பரும்பணைக்
கொங்கை மாதர் - மிகப் பருத்த கொங்கைகளையும் உடைய
பெண்களின், பவள வாய்ப் பிறக்கும் கானம் - பவளம் போன்ற
வாயினின்று பிறக்கும் இசை, வரும் பனி மதியை நோக்கிக் கிண்கிணி
வாய்கொண்டு ஆர்ப்பின் - தோன்றி வருகின்ற குளிர்ந்த நிலாவை
நோக்கி மலரும் கிண்கிணி போன்ற வாயையுடைய மலர் விரிந்து
அதனுள் வண்டிருந்து ஆர்ப்பதுபோலவும், அரும்பு அவிழாமற் போது
உள் வண்டு இருந்து ஆர்ப்பது என்ன - அரும்பு மலராமலிருக்க அவ்
வரும்புக்குள் இருந்து வண்டு ஒலிப்பதுபோலவும் (இருந்தது).

     அம் மடவார் வாய்க்குள்ளிலிருந்து பிறக்கும் இசையானது
கிண்கிணி போன்ற வாயையுடைய மலர் நிலவைக் கண்டு விரிய அதனுள்
வண்டிருந்தார்ப்பதுபோலவும் அரும்பு மலராமல் அவ் வரும்புக்குள்
ளிருந்து வண்டொலிப்பதுபோலவும் இருந்தது என்பது. வாய் சிறிதே
திறந்து பாடினார்கள் என்பது கருத்து.
                                                    (25)

 
644. இல்லையோ இமைத்தல் என்பார் எடாதுகை தொடாது வைத்த
வில்லையோ புருவ மாகி விதித்தனன் வேதா என்பார்
முல்லையோ முருந்தோ முத்தோ முறுவலை அறியோம் என்பார்
நல்லையே நல்லை யென்னா நராதிபர் வியந் துரைத்தார்.

     (இ - ள்.) இல்லையோ இமைத்தல் என்பார் - அங்கு இருந்தவர்
இப் பெண்கள் எப்பொழுதும் கண் இமைத்தல் இல்லையோ என்பார்,
எடாது கை தொடாது வைத்த வில்லையோ புருவமாக வேதா
விதித்தனன் என்பார் - எடுக்காமலும் தொடாமலும் வைத்த வில்லை
இப் பெண்களுக்குப் புருவமாக நான்முகன் அமைத்தானோ என்று
கூறுவார், முல்லையோ முருந்தோ முத்தோ முறுவலை அறியோம்
என்பார் - இவர்களுடைய பல்வரிசை முல்லை அரும்போ மயில் இறகின்
அடிப்பாகமான முருந்தோ அல்லது முத்தோ யாம் அறியோம் என்பார்,
நல்லையே நல்லை என்னா நராதிபர் வியந்து உரைத்தார் - நீங்கள்
நன்றாக இசை பாடுகின்றீர்கள் நன்றாகப் பாடுகின்றீர்கள் என மன்னர்
யாவரும் வியந்து கூறினர்.

     அப் பெண்கள் கண் இமைக்காமலும் புருவத்தை அசைக்காமலும்,
பல் வரிசை புலப்படாமலும் இசை பாடினர் என்பது கருத்து.

     இம் மங்கையர்க்குக் கண்ணிமைப்பது இல்லையோ என்றும்,
அசையாத வில்லை இவர்கட்குப் புருவமாக அமைத்தானோ பிரமன்
என்றும், முத்துப் போன்ற பற்கள் தோன்றவில்லையோ என்றும் வியந்து
கூறினர் என்க.
                                                    (26)

 
645. அட்டமா அனைத்தும் புள்ளும் ஆவிபெற் றேகும் என்பார்
சுட்டநீள் வனங்க ளெல்லாம் சோலையாத் தழைக்கும் என்பார்