பக்கம் எண் :


319

     (இ - ள்.) மகர யாழ் வாங்கி - மகர யாழைக் கையில் எடுத்து,
நீங்கும் மாடகம் முறுக்கி - தளர்ந்த தந்திக்கம்பிகளை முறுக்காணிகாளல்
முறுக்கி ஒழுங்கு செய்து, செம்பொன் சிகரமா முலையிற் சேர்த்தி -
செம்பொன் மலைச்சிகரம் போன்ற தனங்களிலே அவ் வீணையைச்
சார்த்திக்கொண்டு, செவியற இசை எழீஇ - காதோடு பொருந்தும்படி
இசை கூட்டி, தம் நிகர் இலா அமுதப்பாடல் பாணியின் நிறுவி - தமது
ஒப்பு இல்லாத அமுதம் போன்ற பாடலைக் கை வழியில் தோன்ற
நிறுத்தி, பின்னர் பகர்தரும் இசைகள் ஏழும் வகை வகை பாடினாரே
- பின்னர்ச் சொல்லத்தகும் ஏழ் இசைகளையும் முறை முறையாகப்
பாடினார்கள்.

     ஏழ் இசைகள் : குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி,
தாரம் என்பன. இவற்றின் ஓசை மயில், இடபம், ஆடு, கொக்கு, குயிர்,
குதிரை, யானை இவற்றிற்கு உவமை என்பர். இவை முறையே பால்,
தேன், கிழான், நெய், ஏலம், வாழை, மாதுளங்கனி ஆகியவற்றின்
சுவைக்கு ஒப்பு ஆகும். மௌவல், முல்லை, கடம்பு, வஞ்சி, நெய்தல்,
பொன்னாவிரை, புன்னை என்பன மணத்தால் உவமை கூறத்தக்கன.
எழுத்துகள் முறையே ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ
என்பனவாகும். இவற்றின் மாத்திரைகள் முறையே நான்கு, நான்கு,
இரண்டு, மூன்று, நான்கு, மூன்று, இரண்டு என்பனவாம். இவைகளுக்கு
இறைவர் முறையே விசுவாமித்திரன், சமதக்கினி, சந்திரன், சூரியன்,
கௌதமன், காசிபன், ஈசன் என்பவராவர். இன்னும் இதன் விரிவை இசை
நூலுட் காண்க.
                                                    (23)

 
642.

காவியம் கண்ணும் மூடா கவிரிதழ் தானும் கோடா
வாவியம் கமலம் அன்ன வதனமும் நுதலும் ஏறா
தூவியம் தோகை நல்லார் சுவரின்மேல் எழுதி வைத்த
ஓவியம் பாடிற் றென்னப் பாடினார் உருக யாரும்.

     (இ - ள்.) தூவி அம் தோகை நல்லார் - மென்மையான இறகு
களையுடைய மயில் போன்ற சாயலை உடைய பெண்கள், காவி அம்
கண்ணும் மூடா - நீலமலர் போன்ற கண்கள் மூடாமலும், கவிர் இதழ்
தானும் கோடா - முருக்கம்பூவை யொத்த சிவந்த உதடுகள்
கோணாமலும், வாவி அம் கமலம் அன்ன வதனமும் நுதலும் ஏறா -
குளத்தல் மலர்ந்த தாமரைமலர் போன்ற முகமும் நெற்றியும் ஏறாமலும்,
சுவரின் மேல் எழுதிவைத்த ஓவியம் பாடிற்று என்ன - சுவர்மேல்
எழுதிவைத்துள்ள ஓவியம் பாடிற்றோ என்று வியக்கும்படி, யாரும்
உருகப் பாடினார் - யாவரும் மனம் உருகும்படி பாடினார்கள்.

     இசை பாடுவோர் பாடும்போது மேற்கொள்ளவேண்டிய
இலக்கணம் கூறப்பட்டுள்ளது. 'ஓவியம் பாடிற்று என்ன' என்பது இல்
பொருள் உவமை. தலையையாட்டாமலும் கண்ணை அடிக்கடி இமைத்து
மூடாமலும் புருவத்தை நெரிக்காமலும் முகத்தை வேறுபடுத்திக்
காட்டாமலும் பாவைபோல இருந்து இசை பாடவேண்டும் என்பது
இசையிலக்கண விதி. அம் முறைப்படி பாடினர் என்பது.
                                                    (24)

643. கரும்பினைக் கடிந்த தீஞ்சொற் காரினைக் கடிந்த கூந்தல்
பரும்பணைக் கொங்கை மாதர் பவளவாய்ப் பிறக்கும் கானம்