(இ
- ள்.) தோன்றலும் - மன்னனும், சொல்லிய மாற்றம் கேளா
வியந்து நோக்கி - மகளிர் இருவரும் கூறிய மொழிகளைக் கேட்டு
வியந்து பார்த்து, வல்லி நீர் யார் - பெண்களே ! நீங்கள் யார்?, ஏது
ஊர் - உங்கள் ஊர் எது?, ஈண்டு தான் வந்தவாறு ஏது என்றான் -
இவ்விடத்துக்கு நீங்கள் வந்த நோக்கம் யாது என்று கேட்டான், அல்லி
அம் தொடையல் மார்ப - (அப்போது அம்மகளிர்)
அகவிதழ்களையுடைய மலர்மாலை அணிந்த மார்பினையுடைய
மன்னனே, இவ்வனத்து அகத்து வாழ்வோம் - நாங்கள் இக்
காட்டின்கண் வாழ்பவர், புல்லிய சாதி ஈனப் புலைச்சியர் யாங்கள்
ஐயா - ஐயனே ! யாங்கள் தாழ்ந்த சாதியாகிய புலையர் குலத்திலே
பிறந்தவர்கள் ஐயா (என்று கூறினர்).
கேளா
: (கேட்டு) செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.
தோன்றல் - ஆண்மையிற் சிறந்தவன். கலங்கா உள்ளம் படைத்த
மன்னன் ஆதலின் 'தோன்றல்' என்றார். மார்ப! ஐயா! இவ்விரண்டும்
விளி.
(21)
640. |
வேதமா
முனிவன் வைகு மேதகு சாரல் நின்றுன்
பாதமே பணிந்து நோக்கும் அருத்தியில் பதறி வந்தோம்
போதமும் வெறியும் இல்லாப் புல்லியேம் நல்லி யாழும்
கீதமும் சிறிது வல்லேம் கேளெனாக் கிளத்திப் பின்னர். |
(இ - ள்.)
வேதமா முனிவன் வைகும் மேதகு சாரல் நின்று -
வேதங்களைக் கற்ற விசுவாமித்திர முனிவன் தங்கியுள்ள மேன்மையான
இடத்திலிருந்து, உன் பாதமே பணிந்து நோக்கும் அருத்தியின் - உன்
பாதங்களை வணங்கி உன்னைப் பார்க்கவேண்டுமென்கிற விருப்பத்தோடு,
பதறி வந்தோம் - விரைந்து வந்தோம், போதமும் நெறியும் இல்லாப்
புல்லியேம் - ஞானமும் அதற்கேற்ற பழக்கமான முறைகளும் இல்லாத
கீழ்மக்கள் யாம், நல் யாழும் கீதமும் சிறிது வல்லேம் - நல்ல யாழ்
இசைப்பதிலும் இன்னிசை பாடுவதிலும் சிறிது வல்லமை யுடையோம்,
கேள் எனாக் கிளத்திப் பின்னும் - நீ கேட்பாயாக என்று சொல்லி
மேலும்;
இச் செய்யும் குளகம். ஞானம் உடையவர் அதனை மேலும்
வளர்க்க நாள்தோறும் கொள்ளும் நெறிமுறைகள் உண்டு ஆதலால்
"போதமும் நெறியும் இல்லாப் புல்லியேம்" என்றார். நல் + யாழ் =
நல்லியாழ். வந்தோம், புல்லியேம், வல்லேம் என்பன தன்மைப் பன்மை
வினைமுற்றுக்கள். எனா - என்று, கிளத்தி - சொல்லி; கிளத்தி என்ற
எச்சம் அடுத்த கவியிலுள்ள "வாங்கி" "முறுக்கி" முதலிய எச்சங்களைக்
கொண்டு பாடினார் என்ற வினைமுற்றைக்கொண்டு முடியும்.
(22)
641. |
மகரயாழ்
வாங்கி நீங்கும் மாடக முறுக்கிச் செம்பொற்
சிகரமா முலையில் சேர்த்திச் செவியுற இசைஎ ழீஇத்தம்
நிகரிலா அமுதப் பாடற் பாணியி னிறுவிப் பின்னர்
பகர்தரும் இசைகள் ஏழும் வகைவகை பாடி னாரே. |
|