பக்கம் எண் :


352

     (இ - ள்.) பானு குலத்தில் தொல் வேந்தர் சொன்னது மாறார் -
கதிரவன் குலத்திற் பிறந்த உன் முன்னோராகிய பழைய மன்னர்கள்
சொன்ன சொல்லை மாற்றிப் பேசமாட்டார்கள், நின்னிடை அன்னது
காணோம் என்றான் - உன்னிடத்தில் சொன்ன சொல்லைக் காப்பாற்றும்
திறம் இல்லை என முனிவன் கூறினான், மன்னவன் அது கேளா உள்ளம்
நொந்து அற நாணி - மன்னவன் அவ்வார்த்தைகளைக் கேட்டு மனம்
நொந்து மிகவும் வெட்கம்கொண்டு, மதி வல்லோய் - அறிவு
வலிமையுடைய முனிவரே, இன்னமும் ஒன்று உண்டு என்ன இரந்தே
இவை கூறும் - இன்னமும் நான் உன்னிடம் கூறவேண்டியது ஒன்று
உண்டு என்று இரந்து கேட்டுப் பின்வருமாறு கூறுவான்.

     தன் குலத்தின் பெருமைக்கேற்பத் தான் நடக்கவில்லை என்றவுடன்
மன்னன் மிகுந்த வெட்கம் கொண்டான். முனிவன் சொன்னது
நன்னெறிதான் என்பது மனத்திற்பட்டது. அதனால் முனிவனை
வேண்டுகின்றான் எனக் கொள்க.
                                                    (97)

 
       கலிநிலைத்துறை (சந்தம்) வேறு
716. நித்த னைப்பிர மனைஅனை யாய்நினை வழிந்த
பித்த னைப்பொருள் வினாவினை எங்கியான் பெறுகோ
இத்த னைத்தினத் தீவதென் றியம்புவை எனின்யான்
அத்த னைக்குணின் பொருடர அவதியீ கென்றான்.

    (இ - ள்.) நித்தனை பிரமனை அனையாய் - எப்பொழுதும் நிலைத்
திருப்பவனான சிவனையும் பிரமதேவனையும் போன்ற முனிவனே,
நினைவு அழிந்த பித்தனைப் பொருள் வினாவினை - நினைவுகெட்ட
பித்தனாகிய என்னைப் பொருள் கேட்கின்றாய், எங்கு யான் பெறுகோ -
எவ்விடத்தில் யான் தேடிக்கொண்டு வருவேன், இத்தனை தினத்து ஈவது
என்று இயம்புவை எனின் - இத்தனை நாளில் கொடுக்கவேண்டும் என்று
நீ கூறுவையானால், யான் அத்தனைக்குள் நின் பொருள் தர அவதி ஈக
என்றான் - யான் அத்தனை நாளைக்குள் உன் பொருளைத் தர எனக்கு
நீ நாள் அளவு கொடுப்பாயாக என்றாள்.

     சொல்லவேண்டிய முறை தெரிந்து சொல்லாமையால் தன்னைப்
பித்தன் என்று மன்னன் கூறிக்கொண்டான், நாடு நகரங்களை
முனிவனுக்குக் கொடுக்கும்போது 'உனக்கு வேள்விக்காக நான் கொடுத்த
பொருளும் இங்கிருக்கிறது; அதனை நீக்கி மற்றைப் பொருள்களை
யெல்லாம் உனக்குக் கொடுத்தேன்' எனச் சொல்லிக்கொடுக்க வேண்டிய
முறையை மறந்தது தன் பிழை என்பதையுணர்ந்தான்; ஆதலால் தான்
தன்னைப் பித்தன் என்றான். அவதி - தவணை. இது நாள் அளவை
யுணர்த்தும்.
                                                    (98)

 
717. ஊரு நாடுநீண் மலைகளும் கானமும் உழன்றே
யாரு னோடிழுப் புண்பவ ரவதியா ரிடுவார்
சோர முள்ளநீ கூறுமப் பொருடனைச் சொரிந்து
பேரடா உனைத் தடுத்தனன் போகலை என்றான்.