(இ
- ள்.) ஊரும் நாடும் நீண் மலைகளும் கானமும் உழன்றே -
ஊர்களிலும் நாடுகளிலும் நீண்ட மலைகளிலும் காடுகளிலும் வருந்தி,
யார் உன்னோடு இழுப்புண்பவர் - யார் உன்னோடு இழுபட்டுத் துன்பம்
அடைபவர், அவதி யார் இடுவார் - காலக் கெடு யார் கொடுப்பார்,
சோரம் உள்ள நீ கூறும் அப்பொருள்தனைச் சொரிந்து பேரடா -
திருட்டுத்தன்மையுள்ள நீ கூறுகின்ற அப்பொருளைக் கொண்டு வந்து
கொட்டிவிட்டுப் பெயர்ந்து செல்வாயடா, உனைத் தடுத்தனன் பேர்கலை
என்றான் - அதற்குமுன் இவ்விடம்விட்டு நீ பெயர்ந்து செல்ல வேண்டா
உன்னைத் தடுத்திருக்கின்றேன் என முனிவன் கூறினான்.
"சோரம்
உள்ள நீ" என்றதனால் உன் சொல்லில் நம்பிக்கை
இல்லை என்று முனிவர் தடுத்தனர் என்பது. நான் கேட்ட பின்பு
ஒவ்வொரு பொருளையும் கொடுக்கிறாய் : நீயே யுணர்ந்து கொடுத்திலை;
அதனாற் கள்ளமனமுடையவன் என்ற கருத்தைப் புலப்படுத்தியது
சோரமுள்ள நீ என்றது.
(99)
718. |
பக்க
நோக்கிலன் பார்மிசை விழுந்தடி பூண்டு
கக்கல் வந்திட மிடற்றினை ஒடுக்கும்அக் கதைபோல்
விக்க லும்பொரு மலும்மிசை மிசைஎழ விரிநீர்
உக்க கண்ணன்வா யூறுநீர் வற்றிட உரைப்பான்.
|
(இ
- ள்.) பக்கம் நோக்கிலன் - மன்னன் பக்கம் எங்கும் பார்க்க
வில்லை, பார்மிசை விழுந்து அடி பூண்டு - பூமியின்மேல் விழுந்து
முனிவருடைய திருவடிகளை வணங்கி, கக்கல் வந்திட மிடற்றினை
ஒடுக்கும் அக்கதைபோல் - ஒருவனுக்குக் கக்கல் வந்தபோது அவன்
கழுத்தினைப் பிடித்து நெரித்த அத்தன்மைபோல், விக்கலும் பொருமலும்
மிசை மிசை எழ - விக்குதலும் பொருமுதலும் மேலே மேலே உண்டாக,
விரி நீர் உக்க கண்ணன் - மிகுந்த நீர் சிந்துகின்ற கண்களை
யுடையவனாய், வாய் ஊறும் நீர் வற்றிட உரைப்பான் - வாயிலிருந்து
ஊறுகின்ற நீர் வற்றிப்போகும்படி உரைக்கத் தொடங்கினான்.
கக்கல்
- வாந்தி எடுத்தல்; இருமலும் ஆம். கவலையால் வாய் நீர்
வற்றிட நின்றான். பெருமூச்சும் விக்கலும் மேன்மேலும் வரச்
சொல்வதொன்று மறியாமற் சோர்ந்து கண்ணீர் ஒழுக உரைக்கின்றான்
மன்னன்.
(100)
719. |
இழைத்த
தீவினை பொறுத்தனன் அரசுதா என்னத்
தழைத்த அன்பொடு தந்துயா னகன் றிடும்காலை
அழைத்த நீஎனக் கவதி யிட்டாள்விடி லைய
பிழைத்தி லன்இதோர் பெரும்புகழ் பெறுதிஎன் றிரந்தான். |
(இ
- ள்.) இழைத்த தீவினை பொறுத்தனன் - நீ எனக்குச் செய்த
துன்பங்களையெல்லாம் பொறுத்துக்கொண்டேன், அரசு தா என்னத்
தழைத்த அன்பொடு தந்து யான் அகன்றிடும் காலை - அரசாட்சியை
எனக்குக் கொடுத்துவிடு என்று நீ கேட்டபோது மிகுந்த அன்போடு
கொடுத்துவிட்டு யான் விலகிச்செல்லும்போது, அழைத்த நீ - என்னை
மீளவும் அழைத்த நீ, எனக்கு அவதியிட்டு ஆள் விடில் - எனக்கு ஓர்
அளவுகாலம் கொடுத்து
|