என்னுடன் ஓர் ஆளை
நீ அனுப்பினால், ஐய பிழைத்திலன் - ஐயனே!
நான் தவறமாட்டேன், இதோர் பெரும் புகழ் பெறுதி இரந்தான் - இந்த
ஒரு பெரிய புகழைப் பெறுவாயாக என்று கூறி இரந்தான்.
'இவ்வளவு
செல்வமும் அரசும் கொடுத்த யான் சொன்ன சொல்
தவறேன்' என்றான். அவதியும் கொடுத்து ஆளும் அனுப்பினால்
தருவேன்; இதனால் வரும் புகழைப் பெறுதி என்றான். அரிச்சந்திரன்
வேண்டியபடி அருள்புரிந்து ஆளும் அவதியும் தந்தான் கோசிகன் என
எல்லாரும் நின்னைப் புகழ்வர். அது பெரும்புகழ் ஆகும் என்பது கருத்து.
(101)
720. |
சுற்றுண்
டாகிய மலைகளில் வனங்களிற் றொட்டுன்
பற்றுண் டாகிய பதிகளிற் படுபொரு ளல்லால்
உற்றுண் டாகிய நிதியம்உன் திருஉளம் உணர
மற்றுண் டாமெனின் விளம்பிடு வழங்கிட என்றான். |
(இ
- ள்.) சுற்று உண்டாகிய
மலைகளில் வனங்களில் - சுற்றிலும்
இருக்கின்ற மலைகளிலும் காடுகளிலும், தொட்டு உன் பற்று உண்டாகிய
பதிகளில் - தொடர்பு பெற்று உன்னால் கைப்பற்றப்பட்டு இருக்கின்ற
ஊர்களில், படு பொருள் அல்லால் - பொருந்திய பொருள்கள் அல்லாமல்,
உற்று உண்டாகிய நிதியம் - பொருந்தி என்னிடத்தில் உள்ள செல்வம்,
உன் திருவுளம் உணர மற்று உண்டாம் எனில் விளம்பிடு வழங்கிட
என்றான் - உன் மனம் அறிய வேறு செல்வம் உண்டு என்றால் நான்
கொடுக்கின்றேன் நீ கூறு என்றான்.
பற்று
உண்டாகிய பதி - உன்னால் பற்றிக்கொள்ளப்பட்ட ஊர்.
(102)
721. |
ஆம
தேஎனின் அரசகே ளவதியா னுரைப்பன்
ஏம கூடமும் காசியும் அன்றியி லிப்பால்
தாம மார்பநீ தந்தநன் னாடிதற் கப்பால்
போம துண்டெனிற் பொருளும்அப் பொருளலா தளியேல். |
(இ
- ள்.) ஆமதே எனின் அரச கேள் - நான் கூறுவது உனக்கு
உடன்பாடு ஆகுமானால் அரசே கேட்பாயாக, அவதி யான் உரைப்பன் -
காலவளவு யான் கூறுகின்றேன், ஏம கூடமும் காசியும் அன்றியில் -
ஏமகூட மலையும் காசி நகரமும் அல்லாமல், தாம மார்ப இப்பால் நீ தந்த
நன்னாடு - மாலையணிந்த மார்பையுடைய மன்னனே இந்தப் பக்கத்தில்
உள்ள நன்னாடுகள் நீ தந்தவையாகும், இதற்கு அப்பால் போமது உண்டு
எனில் பொருளும் - இந்த நாட்டைக் கடந்துபோய் நீ கொடுக்கும்பொருள்
எனக்கு ஆகும், அப்பொருள் அலாது அளியேல் - அவ்வாறு சென்று
தேரும் பொருளையன்றி வேறு பொருளை நீ அளிக்காதே (என்றான்
முனிவன்.)
(103)
722. |
இந்த
எல்லையில் இப்பொரு ளீதலில் லாமல்
அந்த எல்லையில் பொருடர வல்லையே யானால் |
|