|
முந்துநீ சொன்ன
முறைமையால் அவதியா னீவேன்
றந்திடாயெனிற் சத்திய மேதெனச் சாற்றும். |
(இ
- ள்.) இந்த எல்லையில் இப் பொருள் ஈதல் இல்லாமல் -
எனக்குக் கொடுத்த நாட்டு எல்லையில் இப்பொருளை நீ கொடுக்காமல்,
அந்த எல்லையில் பொருள் தர வல்லையே யானால் - அப்பாற்பட்ட
வேறு நாட்டு எல்லையில் தேடிய பொருளைக் கொடுப்பதற்கு நீ
வல்லமையுடையவன் ஆனால், முந்து நீ சொன்ன முறைமையால் அவதி
யான் ஈவேன் - முன்பு நீ கேட்டுக்கொண்ட முறைமையின்படி காலவளவு
யான் கொடுப்பேன், தந்திடாய் எனில் சத்தியம் ஏது எனச் சாற்றும் -
அந்தக் கால எல்லைக்குள் நீ கொடுக்கவில்லை என்றால் நீ கூறும்
சூளுறவு மொழி (உறுதிமொழி) என்ன என்று முனிவன் கேட்க மன்னன்
கூறத் தொடங்கினான்.
நான்
கொடுக்கும் காலவளவுக்குள் வேற்றுநாட்டெல்லையிற்
பொருள்தேடிக் கொடுத்திலையெனிற் சூளுறவு யாது சொல் என்று
கேட்டான் முனிவன். அதற்கு மன்னன் கூறுவான்.
(104)
723. |
நிற்பி
ழைத்திடின் நினக்கியா னருநிதி அளிக்கும்
சொற்பி ழைத்திடிற் சூளுற வேதெனிற் சொல்வல்
கற்பி ழைத்தநற் சொற்பர தாரத்தைக் கருதி
இற்பி ழைத்தவ னாவனின் னிருநிதி கொடேனேல். |
(இ
- ள்.) நின் பிழைத்திடில் - உனக்கு நான் எக்குற்றம்
செய்தாலும், நினக்கு யான் அரு நிதி அளிக்கும் சொல் பிழைத்திடின் -
உனக்கு யான் பெருஞ்செல்வம் அளிக்கவேண்டிய சொல் தவறினாலும்,
சூளுறவு ஏது எனில் சொல்வல் - யான் கூறுகின்ற வஞ்சினமொழிகள்
எவை என்றால் கூறுகின்றேன், நின் அரு நிதி கொடேனேல் கற்பு
இழைத்த நற் சொல் பரதாரத்தைக்கருதி இல் பிழைத்தவன் ஆவன் -
உனக்குத் தரவேண்டிய செல்வத்தை யான் கொடுக்காவிடில்
கற்புடையவளும் இன்சொல் பேசுகின்றவளுமாகிய பிறருடைய மனைவியை
நினைத்து விரும்பி இல்லறநெறியினின்று தவறியவன் ஆவேன்.
சொல்வல்
: தன்மை ஒருமை வினைமுற்று. இல் பிழைத்தல் -
பிறன்மனைவியை விரும்பித் தவறி நடத்தல். "பிறன்மனை நோக்காத
பேராண்மை" என்றார் திருவள்ளுவர். கற்புடைய மனைவியை விடுத்து
பிறன் மனைவியை விழைந்த பெருங்குற்றமுடையவர் புகும் நரகத்திற்
புகுவேன். இதுவே சத்தியமாகும் என்றான்.
(105)
724. |
காசி
நாட்டினிற் சென்றஅந் நாளில் உம் கனகம்
ஆசின் மாதவ அளிப்பனவ் வவதியி லதுநீ
பேசிடா யென இருபது நாளையிற் பின்பு
மூசி வண்டுறை தாரினோய் தருகென மொழிந்தான். |
(இ
- ள்.) ஆசு இல் மாதவ - குற்றம் இல்லாத பெரிய தவத்தை
யுடைய முனிவ, காசி நாட்டினில் சென்ற அந் நாளில் உம் கனகம்
அவ்வவதியில் அளிப்பன் - காசிநாட்டிற்கு யான் சென்றவுடன் அந்
நாளிலே
|