உன்னுடைய பொன்னை
நீ குறித்த கால அளவில் யான்கொடுப்பேன்,
அது நீ பேசிடாய் என - அந்தக் கால எல்லையை நீ குறிப்பிட்டுக் கூறு
என்றவுடன், (முனிவன்) வண்டு மூசி உறை தாரினோய் - வண்டுகள்
மொய்த்துத் தங்கியிருக்கும் மாலையையணிந்த மன்னனே, இருபது
நாளையில் பின்பு தருகஎன மொழிந்தான் - இருபது நாளையில் பிறகு
தருவாயாக எனக் கூறினான்.
காசிநாடு
சென்றவுடன் நீ குறித்த நாளில் தருவேன் என்றான்.
முனிவன் 'இருபது நாள் எல்லையில் தருக' என்றான் என்பது.
(106)
725. |
அங்குற்
றெய்தநா ளம்முறைக் கிருமடங் கடங்கா
வெங்குற் றீட்டுவ திப்பொரு ளையவென் றியம்ப
நங்குற் றம்மிலை நாற்பதில் றெட்டென நவின்றான்
உங்குற் றம்மிதற் குட்கொடா தொழிந்திடின் என்றான். |
(இ
- ள்.) ஐய அங்கு உற்று எய்த நாள் அம் முறைக்கு இரு
மடங்கு அடங்கா - ஐயனே அங்குப் போய்ச் சேருவதற்கே அந்த
இருபது நாட்களின் இருமடங்காகிய நாற்பது நாள்கள் எனினும் போதா,
எங்கு உற்று ஈட்டுவது இப்பொருள் - எவ்விடத்தில் சென்று இவ்வளவு
பெரும் பொருளையும் நான் எவ்வாறு தேடுவது, என்று இயம்ப - என்று
கூறியவுடன், நம் குற்றம் இலை நாற்பதிற்றெட்டு என நவின்றான் -
நாற்பத்து எட்டு நாளுக்குள் நீ கொடுக்கவேண்டும் இனி நம்மேற் குற்றம்
இல்லை என்றான், இதற்குள் கொடாது ஒழிந்திடின் உம் குற்றம் என்றான்
- இந்த எல்லைக்குள் கொடாது இருப்பீராயின் அது உம்முடைய
குற்றமேயாகும் என்றான் முனிவன்.
காசிக்குச்
செல்லவே நாற்பது நாளாகும் என்று கூறியதனால் நான்
நாற்பத்தெட்டு நாள் அவதி கொடுத்தேன். இனி என்மேற் குற்றமில்லை.
இக்காலவளவுக்குட் கொடுத்திலையெனில் அது உன் குற்றமேயாகும்
என்று முனிவன் உரைத்தான் என்பது.
(107)
726. |
இப்புத்
திக்கினி தொத்தனன் ஆள்விடு கென்று
குப்புற் றேகலும் கௌசிகன் மீளவும் கூவித்
தப்புத் தீர்தரத் தந்தவப் பொருளெலாம் பதிவந்
தொப்புத் தந்துபின் போவெனா மன்னனுக் குரைந்தான். |
(இ
- ள்.) இப் புத்திக்கு இனிது ஒத்தனன் - நீ கூறிய
அறிவுரைக்கு இனிது ஒப்புக்கொண்டேன், ஆள் விடுக என்று குப்புற்று
ஏகலும் - ஆள் என்னுடன் அனுப்புக என்று கூறிக் குப்புற விழுந்து
வணங்கிச் சென்றவுடன், சௌசிகன் மீளவும் கூவி - சௌசிகமுனிவன்
மறுபடியும் அழைத்து, தந்த அப் பொருள் எலாம் பதி வந்து தப்பு தீர்வர
ஒப்பு தந்து பின் போ எனா - நீ எனக்குத் தந்த அந்தப் பொருள்களை
எல்லாம் என் ஊருக்கு வந்து குற்றம் இல்லாமல் ஒப்புத் தந்து பிறகு
போவாயாக என்று, மன்னனுக்கு உரைத்தான் - மன்னனிடம் கூறினான்.
|