குப்புற்று
- குப்புறவிழுந்து வணங்கி. விடுக + என்று = விடு
கென்று இதில் அகரம் தொகுத்தலாயிற்று. நீ கொடுத்த பொருள்கள்
எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்புவித்துப் பின் செல்க என்று
முனிவன் உரைத்தனன் என்பது.
(108)
727. |
பார
ளித்தனை புரக்கநின் பதியிடைச் சென்றால்
ஆர ளித்தனர் என்பர்நின் னடியவர் எல்லாம்
ஊர ளித்திட வுடன்வரத் துணிதியீ தொழியின்
நீர ளித்ததே எனக்குமண் ணினக்கெனா மொழிந்தான். |
(இ
- ள்.) புரக்க பார் அளித்தனை - நான் ஆளும்படி பூமியை
எனக்கு அளித்தாய், நின் பதி யிடைச் சென்றால் நின் அடியவர்
எல்லாம் யார் அளித்தனர் என்பர் - நின் ஊரின்கண் நான் சென்றால்
உன் அடியார் எல்லோரும் உனக்கு இந்த நாட்டை யார் அளித்தனர்
என்று கேட்பார்கள், ஊர் அளித்திட உடன் வரத் துணிதி - ஊரை
என்னிடம் ஒப்புக்கொடுக்க என்னுடன் துணிந்து வருவாய், ஈது ஒழியின்
நீர் அளித்ததே எனக்கு மண் நினக்கு எனா மொழிந்தான் - இங்ஙனம் நீ
செய்யவில்லை யென்றால் நீ தாரைவார்த்துக்கொடுத்த நீர் மட்டுமே
எனக்கு உரிமையாகும் இப் பூமி உன்னுடையதாகிவிடும் என்றான்.
எனா
- என்று. இது - ஈது என நீண்டது. 'நின்னடியவர்' என்றது
அவனாட்டுக் குடிகளையுணர்த்தியது. துணிதி : முன்னிலை யேவலொருமை
வினைமுற்று. துணி + த் + இ = துணிதி. த் : எழுத்துப்பேறு.
(109)
728. |
நன்று
நன்றுநீ நகரியி லெழுந்தரு ணாயேன்
இன்று நின்பிற கெய்துவ லென்றினி தியம்பச்
சென்று கௌசிகன் றேர்மிசை யேறினன் றிரண்டு
நின்ற மாதர் கரியினும் பரியினும் நிறைந்தார். |
(இ
- ள்.) நன்று நன்று நீ நகரியில் எழுந்தருள் - நன்று நன்று நீ
நகரத்துக்குச் செல், நாயேன் இன்று நின்பிறகு எய்துவல் - நாயடியேன்
இப்பொழுதே நின் பின்னால் வருவேன், என்று இனிது இயம்ப - என்று
இவ்வாறு இனிமையாகக் கூறியவுடன், கௌசிகன் சென்று தேர் மிசை
ஏறினன் - கௌசிகமுனிவன் சென்று தேரின்மேல் ஏறினான், திரண்டு
நின்ற மாதவர் கரியினும் பரியினும் நிறைந்தார் - பக்கத்தில் நிறைந்து
நின்ற தவமுனிவர்கள் யானைகளிலும் குதிரைகளிலும் ஏறிக்கொண்டனர்.
நன்று நன்று : அடுக்குத்தொடர். இன்று - இப்பொழுது. 'உன்
பின்னே நான் வருவேன்; நீ முன் செல்' என்றான். அவன் அரசன்
ஆதலால் ஊர்தியிலேறிச் செல்வான், இவன் நடந்து செல்லவேண்டியவன்.
ஆதலின் அங்ஙனம் கூறினன் என்று கொள்க.
(110)
|