729. |
தேரி
லேறிமா முனிசெலச் சேனைபின் செல்லப்
போரில் வீரனும் தேவியும் புதல்வனும் நடுவே
பாரின் மேனடந் தடிபொறா துடல்பதை பதைக்க
வேரி வாவிவிட் டயோத்தியை நோக்கியே விரைந்தார். |
(இ
- ள்.) மா முனி தேரில் ஏறிச் செல - சிறந்த முனிவனாகிய
கௌசிகன் தேரில் ஏறிச் சென்றபோது, சேனை பின் செல்ல - சேனை
பின் தொடர்ந்து செல்ல, போரில் வீரனும் தேவியும் புதல்வனும் - போர்
செய்வதில் வீரனாகிய அரிச்சந்திரனும் அவன் மனைவி சந்திரமதியும்
மைந்தனாகிய தேவதாசனும், நடுவே அடி பொறாது உடல் பதைபதைக்கப்
பாரின்மேல் நடந்து - அச்சேனையின் நடுவே கால்கள் வலி
பொறுக்காமல் உடம்பு பதைபதைக்கப் பூமியின்மேல் நடந்து, வேரி வாவி
விட்டு அயோத்தியை நோக்கியே விரைந்தார் - தேன் சிந்துகின்ற
குளத்தினைவிட்டு நீங்கி அயோத்தியை நோக்கிச் சென்றனர்.
வேரி
- மணம். மணம் பொருந்திய வாவி என்க. பூமியில்
வெப்பத்தைப் பொறுக்காமல் கால் சுடும்போது உடல் நடுங்கும் ஆதலால்
'அடி பொறாது உடல் பதைபதைக்க' என்றார். பதைபதைக்க என்பது
இரட்டைக்கிளவி.
(111)
730. |
கன்ன
லம்பெருங் கழனியும் சோலையும் கடந்து
வன்ன மாமணிப் புரிசையின் புறத்துவந் தணைந்தார்
நன்ன கர்ப்பெருஞ் சனமெலாம் எதிர்கொடு நண்ணி
மன்ன னைச்செழுந் தேர்மிசைக் கண்டிலர் மருண்டார். |
(இ
- ள்.) கன்னல் அம் பெருங் கழனியும் சோலையும் கடந்து
- கரும்பு விளைகின்ற அழகிய பெரிய வயல்களையும் சோலைகளையும்
கடந்து, வன்ன மா மணிப் புரிசையின் புறத்து வந்து அணைந்தார் -
அழகிய மணிகளால் இழைக்கப்பெற்ற நகர மதிலின் வெளியில் வந்து
சேர்ந்தனர், நன்னகர்ப் பெருஞ் சனமெலாம் எதிர் கொடு நண்ணி - நல்ல
நகரத்தில் உள்ள மக்கள் எல்லோரும் எதிர்கொண்டு வந்து, மன்னனைச்
செழுந் தேர் மிசை கண்டிலர் மருண்டார் - மன்னனைச் செழுமையான
தேரின்மேல் காணதவர்களாய் மயங்கினர்.
மன்னவன்
வேட்டைக்குச் சென்றவன் தேர்மேல் வருவான் என்று
அயோத்திநகர்க் குடிகள் எதிர்நோக்கினர். தேர்மேல் மன்னனைக்
கண்டிலர் திகைத்தனர் என்க. கண்டிலர் என்பது எச்சப் பொருள் தந்தது.
(112)
731. |
இரத
மேன்முனி ஏறிய தகிதமோ இதமோ
சரத மோஎனு மையத்தார் வந்தவண் சார்ந்தார்
விரதம் இவ்வகை விளைந்தவா றேதென மெலிந்து
கரத லங்களான் முகத்தறைந் தழுதனர் கதறி. |
|