பக்கம் எண் :


384

776. உள்ளியதீ வினைஅனைத்தும் தனித்திருத்தி வகைவகையே
   உரைத்து நீபோய்
அள்ளியிடும் பொருள்கவரா தானையின்மேற் கவண்சிலைபோ
   மளவு தந்தாற்
கொள்ளுதிநீ பின்போன கூலியையும் பெறுதிஎனாக்
   கூறித் தீய
வெள்ளிதனை யுடன்கூட்டி மீண்டும்அழைத் தொருவாய்மை
   விளம்ப லுற்றான்.

     (இ - ள்.) தீய வெள்ளிதனை தனித்து இருத்தி - தீய குணங்களை
யுடைய வெள்ளியைத் தனியே அழைத்து இருக்கச்செய்து, உள்ளிய
தீவினை யனைத்தும் வகை வகையே உரைத்து - தான் நினைத்த தீவினை
களையெல்லாம் வகைவகையாக எடுத்துச் சொல்லி, நீ போய் அள்ளி இடும்
பொருள். கவராது - நீ சென்று அவன் அள்ளிக்கொடுக்கின்ற பொருளைப்
பெற்றுக்கொள்ளாமல், ஆனையின்மேல் கவண் சிலை போம் அளவு
தந்தால் கொள்ளுதி - ஆனையின்மேல் ஏறி நின்று கவண் கல்
விட்டெறிந்தால் அது போம் அளவு உயர்வான பொருள் தந்தால்
பெற்றுக்கொள்வாயாக, பின் நீ போன உயர்வான பொருள் தந்தால்
பெற்றுக்கொள்வாயாக, பின் நீ போன கூலியையும் பெறுதி எனாக் கூறி -
பிறகு நீ உடன் சென்றதற்குரிய கூலியையும் பெற்றுக்கொள்வாயாக என்று
கூறி, உடன் கூட்டி மீண்டும் அழைத்து ஒரு வாய்மை விளம்பல் உற்றான்
- அவனுடன் சேர்த்து மறுபடியும் அழைத்து ஓர் உண்மை கூறத்
தொடங்கினான்.

     ஆனையின்மேல் கவண்சிலை போம் அளவு என்பது மிகுந்த
செல்வம் என்ற குறிப்பு. 'வகைவகையே உரைத்து' என்றதனால் கோசிகன்
சுக்கிரனுக்கு உண்மை யாவும் கூறினான் என்பது விளங்கும். அசுரர்
கட்கெல்லாம் குருவாகிய அவனையும் தவவலிமையால் அழைத்துத்
தனக்கேவல் புரிவித்தான் என்பது இதனால் தோன்றியது.
                                                    (24)

 
777. துன்றுபசிக் கடகுகனி தேடும்போ தெனக்கினிய
   சோறு வேண்டும்
என்றுமொழி தந்திடினும் ஏலாது வேண்டாவென்
   னிவனூண் பெற்றால்
அன்றுபொரு டருமுன்உணற் ககலேனில் லெனத்தடுநம்
   அவதி வந்தால்
நின்றவரைக் கரிகுறித்து மறுதினத்தில் நில்லாம
   னீவா என்றான்.

     (இ - ள்.) துன்று பசிக்கு அடகு கனி தேடும்போது - மிகுந்த
பசிக்கு இலை கனி முதலியன தேடும்போது, எனக்கு இனிய சோறு
வேண்டும் என்று மொழி - எனக்கு இனிய சோறுதான் வேண்டும் என்று
கூறு, தந்திடினும் ஏலாது வேண்டா என் - சோறுகொண்டு வந்து தந்தால்
அதனைக் குறைகூறி வேண்டா என்று சொல், இவன் ஊண் பெற்றால்
அன்று பொருள் தரும்