|
வேறு
|
1215. |
மன்னர்
வாழிய மாமறை வாழிய
செந்நெல் மன்னுக செந்தமிழ் ஓங்குக
அன்ன தான அரிச்சந் திரன்கதை
தன்னைக் கேட்டவர் வாழ்வு தழைக்கவே.
|
(இ
- ள்.) மன்னர் வாழிய - மன்னர்கள் வாழ்க, மாமறை வாழிய
- சிறந்த மறை நூல்கள் வாழ்க, செந்நெல் மன்னுக - செந்நெல் விளைவு
பெருகுக, செந்தமிழ் ஓங்குக - செந்தமிழ் வளர்ந்து மேன்மை எய்துக,
அன்னதான அரிச்சந்திரன் கதை தன்னை - அத்தகைய
அரிச்சந்திரனுடைய கதையை, கேட்டவர் வாழ்வு தழைக்கவே -
கேட்டவர்களுடைய வாழ்வு தழைத்து மேன்மை உண்டாகுக.
ஆக
விருத்தம் 1215
|