(இ
- ள்.) அவ் வாள் நகரத்து ஒரு திங்கள் இருந்து - அந்த
ஒளிபொருந்திய நகரத்தில் ஒரு திங்கள் வரை இருந்து, அருள் மா
முனியைத் தொழுதே விடை கொண்டு - அருள் மிகுந்த வசிட்ட
முனிவரைத் தொழுது விடைபெற்றுக்கொண்டு, இறையும் மகனும் பிறரும்
எவ்வாறு மறந்து தரிப்பம் எனா மெலிய - அரிச்சந்திர மன்னனும் மகனும்
மற்றவர்களும் நாங்கள் எவ்வாறு உன்னை மறந்து வாழ்வோம் என்று
வருந்த, செவ் வாரண வாசியர் கோன் அவரை - சிவந்த காசிமாநகரத்து
அரசன் அவர்களை, திரு மார்பு உறவே தழுவி - தன் அழகிய மார்பு
பொருந்தும்படி தழுவிக்கொண்டு, பரியும் கை வாரணமும் படையும்
மிடைய - குதிரைகளும் யானைகளும் படைகளும் நெருங்கி வர, காசித்
திரு நாடு புகுந்தனனே - காசிமாநகரத்தை அடைந்தான்.
காசி
மன்னன் ஒரு திங்கள் வரை அயோத்தியிற் றங்கினன். பின்னர்
அரிச்சந்திரன் அமைச்சன் முதலியவர்களிடத்தும் அந் நகரத்தாரிடத்தும்
விடைபெற்றுக் காசி நகர் சென்றான்.
(24)
1214. |
கடிமீ துறுகார்
வளம்மல் குதிருக்
காசித் திருநா டனுமே கியபின்
முடிமீ தொளிபொங் கிடவெண் குடையும்
முத்தின் குடையும் கொடியும் மிடையப்
படிமீ தினின்மன் னவர்வந் துதொழப்
பலபா வையர்பா ணர்பரிந் திடவே
அடிமீ துவணங் கவயோத் தியர்கோன்
அரியா சனமீ திலிருந் தனனே. |
(இ - ள்.) கடி மீது உறு கார் வளம்
மல்கு திருக் காசித் திரு
நாடனும் ஏகிய பின் - காவல் மிகுதியுடையதும் மழை வளம் மிக்கதுமான
காசிநாட்டரசன் சென்ற பின்பு, முடிமீது ஒளி பொங்கிட -
தலைமுடியின்மேல் ஒளி வீச, வெண் குடையும் முத்தின் குடையும்
கொடியும் மிடைய - வெண்கொற்றக் குடையும் முத்துக் குடையும்
கொடியும் நெருங்க, படி மீதினில் மன்னவர் வந்து தொழ - பூமியின்
மேல் மன்னர்கள் வந்து வணங்கவும், பல பாவையர் பாணர் பரிந்திடவே
- பல பெண்களும் இசைப் பாணர்களும் அன்பும் விருப்பமும் கொண்டு,
அடிமீது வணங்க - திருவடிகளில் வீழ்ந்து வணங்க, அயோத்தியர்
கோன் அரியாசனம் மீதில் இருந்தனனே - அயோத்தி நகரத்து
அரசனாகிய அரிச்சந்திரன் அரியணையிலே அமர்ந்திருந்தான்.
காசி மன்னன் தன்னாட்டிற்குச் சென்றபின் அரிச்சந்திரன்
முடி மேல்
வெண்கொற்றக் குடை நிழற்றவும், அடிமேல் பல நாட்டு மன்னவர் வீழ்ந்து
வணங்கவும் அரசுபுரிந்திருந்தான்.
(25)
உத்தர
காண்டம் முற்றிற்று.
அரிச்சந்திர
புராணம் மூலமும் உரையும் முற்றும்.
|