ஓம்
மேருமந்தர புராணம்
மூலமும் உரையும்
1 - வது : வைசயந்தன் முத்திச்சருக்கம்.
கடவுள் வாழ்த்து.
1. குற்றங்க ளில்லான் குணத்தானிறைந் தான் குணத்தான்
மற்றிந்த வைய மளந்தான்வைய நின்ற பெற்றி
முற்று முரைத்தா னுரையீரொன்ப தாய தொன்றாற்
செற்றங்கடீர்ப்பான் விமலன்சரண் சென்னி வைத்தேன்.
(இதன்
பொருள்) குற்றங்கள் -
(விபாவமாகிய இராகத்வேஷமோகங்க ளென்னும்) குறைகள்,
இல்லான் -
இல்லாதவனும், குணத்தால் -
(ஸ்வபாவ குணங்களாகிற
அனந்தஞானாதி) குணங்களால், நிறைந்தான் - நிறையப் பெற்றவனும்,
குணத்தால் - (அந்த அனந்தஞானாதி)குணங்களால், மற்று - பின்னை,
இந்தவையம்
- இந்த உலகத்தை, அளந்தான் - (பரமாணுவினால்)
அளப்பவனும், வையம் - இந்தவுலகத்தில்,
நின்ற -
நிலைபெற்றிராநின்ற, பெற்றி - (ஜீவாதிபதார்த்தங்களினது) தன்மையை,
முற்றும் - முழுமையும், ஒன்றால் - (திவ்வியத்துவனி) ஒன்றினால்,
உரை யீரொன்பதாயது - பதினெட்டு விதமான பாஷைகளினால்,
உரைத்தான் - கூறி அருளியவனும், செற்றங்கள் (தனது பாதத்தைச்
சேர்ந்த பவ்வியப் பிராணிகளது) த்வேஷங்களை,
தீர்ப்பான் -
நீக்குபவனும், (ஆகிய) விமலன் - ஸ்ரீ : விமல தீர்த்தங்காருடைய,
சரண் - பாதங்களை, சென்னி - சிரசில். வைத்தேன் -
தரித்தேன்,
என்றவாறு.
இந்த நூலாசிரியர், இருபத்துநாலு தீர்த்தங்காருள்
பதின்மூன்றாந்
தீர்த்தங்கரராகிய ஸ்ரீ : விமல தீர்த்தங்கரரை மங்களார்த்தமாக முதலில்
ஸ்தோத்திரம் செய்ததற்குக் காரணம் :- ‘இந்தக் கதா நாயகர்களாகிய
மேரு, மந்தரர்கள், விமல |