பக்கம் எண் :


2மேருமந்தர புராணம்  


 

தீர்த்தங்கரரின்   கணதரர்களாதலால்,   முக்கியமாக  அந்த   விமல
தீர்த்தங்கரரையே  ஸ்துதிக்கவேண்டு"  மென்பதே.  மேரு, மந்தரர்கள்,
யாரெனில்,  சிம்மசேன  மகாராஜனுடைய  பத்தினியாகிய இராமதத்தை
மேருவும், பூர்ணசந்திரனென்னும் இரண்டாவது குமாரன் மந்தரனுமாவர்.
அனந்த  ஞானாதி  குணங்களாவன:-  அனந்த   ஞானம்,   அனந்த
தர்சனம், அனந்த சுகம், அனந்த வீர்யம் என்பன. பரமாணு என்பது -
அதி   சூக்ஷமமும்,   அவிபாகியுமாகிய   அணு.               (1)

அவையடக்கம்.

 2. மேதக்க சோதி விலமலன்கணத் துக்கு நாதர்
   மாதக்க கீர்த்தி யுயர்மந்தர மேரு நாமர்
   போதக் கடலார் புராணப்பொரு ளான்ம னத்தைச்
   சோதிக்க லுற்றேன் றமிழாலொன்று சொல்ல லுற்றேன்.

     (இ-ள்.) மேதக்க - மேன்மையாகிய, சோதி - ஜோதியையுடைய,
விமலன்  -  விமலதீர்த்தங்கரருடைய,   கணத்துக்கு   -   (த்வாதச)
கணங்களுக்கு,    நாதர்     -     முக்கியர்களாகிய,    மாதக்க -
பெருமைபொருந்திய,  கீர்த்தி. - புகழினால்,  உயர் - மேன்மையாகிய,
மந்தரமேரு      நாமர்    -    மந்தரனென்றும்     மேருவென்றும் பெயருடையவர்களாகிய,   போதக்கடலார்   -   சுருத   ஞானமாகிய
சமுத்திரத்தையுடைவர்களின்,   புராணப்பொருளால்  -  புராணமாகிய
பொருளினால்,   மனத்தை   -   நூலாசிரியனாகிய  எனது  மனதை,
சோதிக்கலுற்றேன் - பரீக்ஷிப்பதற்கு  உத்தேசித்தவனாய்,  தமிழால் -
திராவிட பாஷையினால்,  ஒன்று - ஒரு காவியத்தை, சொல்லலுற்றேன்
- சொல்லத்   தொடங்கினேன்.   எ-று.                      (2)

 3. மலைபோல நின்று வெயில்வன்பனி மாரி வந்தால்
   நிலைபேர்த லில்லார் நிலையின்முன்னெண் ணாது நின்றேன்
   கலையா னிறைந்தார் கடந்தகவி மாக் கடலின்
   நிலையாது மெண்ணா திதுநீந்துதற் கும்மெ ழுந்தேன்.

     (இ-ள்.)  வெயில் - வெயிலாகிய  கோடை  காலமும்,  வன் -
கொடுமையாகிய,  பனி  -  பனிக்காலமும், மாரி  -  மழைக்காலமும்,
(ஆகிய  இம்மூன்றும்)  வந்தால் - வந்தாலும்,  மலைபோல  நின்று -
பர்வதம்போல   சலியாது  நின்று,  நிலை  -  நின்ற   நிலைமையில்,
பேர்தலில்லார் - நீங்குதலில்லாதவர்களாகிய முனிவர்களது, நிலையின்-
கூட்டங்களின்,   முன்  -  எதிரில்,   எண்ணாது  -  (இம்முனிமை,"
அதாவது :  திரிகால  யோகத்தோடு   கூடிய  துறவு  கஷ்டமென்று)
எண்ணாமல்,  நின்றேன்  -  நூதனமாக   தபசைச்   சேர்ந்திராநின்ற
(இந்நூலாசிரியனாகிய)யான், கலையானிறைந்தார் - ஸாஸ்திரங்களினால்
சம்பூர்ணமாகிய சுருதகேவலிகளினால்,