19. சாதுரிய மில்லவரு மில்லைமைந்தர் தஞ்சொலு
மாதுரிய மில்லைவயு மில்லைமற் றவர்செயல்
போதுரிய மில்லவையு மில்லைபொன் னெயிலிறைக்
காதரமு மில்லவரு மில்லையந்த நாடெலாம்.
(இ-ள்.) அந்தநாடெலாம்
- அத்தேச முழுதிலும், மைந்தர் -
புருஷர்களில், சாதுரியமில்லவரும் - கல்வித்திறமை யில்லாதவர்களும்,
இல்லை-, தம் - அவர்களுடைய, சொல்லும் - வசனங்களிலும்,
மாதுரியம் - மதுரமாக, இல்லவையும் - இல்லாதவைகளும், இல்லை-,
அவர்செயல் - அவர்கள் செய்கைகளில்,
போதுரியம் -
காலத்துக்குரியவைகளாய், இல்லவையும் - இல்லாதவைகளும், இல்லை-,
பொன் - பொன்னாலாகிய,
எயில் - மும்மதில் சூழ்ந்த
சமவசரணத்திலிராநின்ற, இறைக்கு - அருக பரமனுக்கு, ஆதரம்
-
பிரீதியாகிய அருகத்பக்தி, இல்லவரும் - இல்லாதவரும், இல்லை-,
எ-று. (19)
மற்று - அசை. ஆதரமும்
என்பதில் உம் - அசைநிறைப்
பொருளது.
20. சீலமும் வதங்களுஞ் செறிவுமில் லவரிலை
காலைமாலை நீதியோடு கல்வியில் லவரிலை
வேலைமுன்பு நல்லதான மின்றியுண் பவரிலை
மாலைகாலை மாதவரை வந்தியாரு மில்லையே.
(இ-ள்.) சீலமும்
- சீலாச்சாரமும், வதங்களும் - விரதங்களும்,
செறிவும் - அடக்கமும், இல்லவர் - இல்லாதவர்கள், இல்லை-, காலை
- பிராதக்காலத்திலும், மாலை - மாலைக்காலத்திலும், நீதியோடு
-
நீதியுடனே, கல்வி யில்லவர் - வித்தை ஓதுதல்
இல்லாதவர்கள்,
இல்லை-, வேலை - ஆகார வேளைக்கு, முன்பு - முன்னதாக, நல்ல -
நன்மையாகிய, தானம் - ஆகாராதி தானங்களை, இன்றி - செய்தல்
இல்லாமல், உண்பவர் - புசிப்பவர்கள்,
இல்லை-, மாலை -
மாலையிலும், காலை - காலையிலும், மாதவரை - மஹா தபசையுடைய
பரமேஷ்டிகளை, வந்தியாரும் - வணங்காதவர்களும், இல்லை-, எ-று.
பரமேஷ்டிகளின் ஸ்வரூபத்தை பதார்த்த ஸாரமென்னும்
நூலில் 30-வது உபயோகாதி காரத்தில் பார்த்துக்கொள்க.
(20)
21. ஐங்கணைக் கிழவனைக் கடந்தமெய்த் தவரெனும்
புங்கவர்க் கிறைவனற் சிறப்புமுன் பிலாதன
மங்கலத் தொழில்களில்லை மானமா யமந்தநா
டெங்குமில்லை யாவரு மிறைஞ்சிமெய் யொழுகலால்.
(இ-ள்.) ஐங்கணைக்கிழவனை
- பஞ்சபாணங்களுக்கு
முரியவனாகிய மன்மதனை, கடந்த
- ஜெயித்த, மெய் -
உண்மையையுடைய, தவரெனும் - தபசை |