பக்கம் எண் :


 வைசயந்தன் முத்திச்சருக்கம் 9


 

னது,  சீர் - குணங்களை,  ஓதலானும் - சொல்லி  ஸ்துதிப்பதனாலும்,
கற்புடை     பதிவிரதாகுணமுடைய,     காமர்     -      அழகிய,
வல்லியார்களேபோலும்  -  புஷ்பக்கொடி  போன்ற ஸ்திரீமார்களுக்கு
ஒப்பாகும், எ-று.

     (ஊர்கள்   என்பது    இடவாகு    பெயராய்    அதிலுறையும்
மனிதர்களைக் காட்டி நின்றது.)                             (16)

வேறு.

 17. பாரிலுள்ள வர்க்கெலாம் படுபயன் பொதுவுமாய்
    ஏர்மலிந் திடங்களெங்கு மின்பமே பயந்துநல்
    வேரிசாந்த மூடுபோகி மேவியாடல் பாடலோடும்
    வாரமாதர் போன்ற மாட வூர்கடோறு மாடெலாம்.

     (இ-ள்.)  மாடம் - உப்பரிகைகளையுடைய,   ஊர்கள்தோறும் -
ஊர்களிலெல்லாம்,   மாடெலாம்   -   செல்வங்களெல்லாம், பாரில் -
பூமியில்,  உள்ளவர்க்கெலாம்  -  இருக்கும் மனிதர்க்கெல்லாம், படு -
தம்மில்  உண்டாகிய,  பயன்  -  பிரயோசனமானது,  பொதுவுமாய் -
சாமான்யமாகி,    இடங்களெங்கும்   -   எவ்விடங்களிலும்,   ஏர் -
அழகினால்,   மலிந்து   -   நிறையப்பட்டு,    இன்பமே   பயந்து -
சௌக்கியத்தைக்   கொடுத்து,   நல்   -   நன்மையாகிய,   வேரி -
வாசனையையுடைய,   சாந்தம்   -   சந்தனத்தால்   -   (அதாவது :
சந்தனக்குழம்பு பூசிக் செய்துகொண்ட அலங்காரத்தாலே),  ஊடுபோகி
-  நர்த்தன  சபையினுட்புகுந்து,   மேவி   -   (தங்கள்  இன்பத்தை
எல்லோருமனுபவிக்கும்படி)  சார்ந்து,  ஆடல் பாடலோடும் - நர்த்தன
கானங்களோடும்,  (பொருந்திய)  வாரமாதர்  போன்ற - வாரவிலாசினி
ஸ்திரீகளை நிகர்த்திருப்பனவாம், எ-று.                       (17)

 18. சுந்தரத் தலம்மணி சுவர்பளிங்கு செம்பொனா
    லந்தரத் தடக்கமா யநேகமாலை நான்றகம்
    மைந்தரும் மயிலனாரு மல்குமாட மாளிகை
    யிந்திர விமானமிங் கிழிந்திருந்த நீரவே.

     (இ-ள்.)  சுந்தரத்தலம் - அழகிய பூமி  (கீழிடமானது),  மணி -
அரதனம் முத்து  முதலிய  இரத்தினங்களாகவும்,  சுவர் - சுவரானது,
பளிங்கு  -  ஸ்படிகமாகவும்,   (செய்து)   செம்பொனால்  -  சிவந்த
பொன்னால்,  அந்தரத்து  -  மேலே, அடக்கமாய் - மூடப்பட்டதாகி,
அகம் - உள்ளே,  அநேக  மாலை - (முத்து,  இரத்தினம், பூ, பொன்
முதலியவற்றாலாகிய)  பல  மாலைகள்,  நான்று - தொங்கவிடப்பட்டு,
மைந்தரும்   -   புருடர்களும்,  மயிலனாரும்  -  மயிற்சாயலுடைய
ஸ்திரீகளும்,    மல்கும்    -    நிறையும்படி    சமைந்த,  மாடம் -
உப்பரிகைகளும்,   மாளிகை   -   வீடுகளும்,   இந்திர  விமானம் -
தேவவிமானம்,  இங்கு  -  இவ்விடத்தில்,  இழிந்திருந்த - வந்திருந்த
தென்று சொல்லும்படியான, நீர - குணத்தையுடையனவாகும், எ-று. (18)