பக்கம் எண் :


8மேருமந்தர புராணம்  


 

பிரகாசம் பொருந்திய, அரி - பருக்கைக் கற்களையுடைய, சிலம்பின் -
பாதச்சிலம்புகளை   யணிந்திராநின்ற,   நல்லார்  -  ஸ்த்ரீகள், சில் -
சிறிதாகிய,  அரி - சிலம்பின்  கற்கள் (மணிகள்),  சிலம்ப - சப்திக்க,
ஆடி - நர்த்தனமாடி, கன்னி - இளமைப் பருவமுள்ள, யாழ்பயிலும் -
வீணையைக்    கற்கும்,    சாலை   -   இடத்தை,   போன்றன  -
ஒத்திருப்பனவாம், எ-று.                                   (14)

 15. சாலிகள் கரும்பிற் செற்றிச் சாலவு முயர்ந்து தம்மின்
    மேலள வொத்துச் செம்பொன் விரிந்துட னீன்று மேலோர்
    காலுற வணங்கு வாரிற் கமலத்தி னிறைஞ்சிக் காய்த்த
    நீலநற் பவழ முத்தின் கழுத்தவாய் நிறைந்த பூகம்.

     (இ-ள்.) சாலிகள் - நெற்பயிர்கள், கரும்பில் - கரும்பைப்போல்,
செற்றி - நெருங்கி,  சாலவும் - மிகவும்,  உயர்ந்து - ஓங்கி  வளர்ந்து,
தம்மில் - தங்களுக்குள்ளே,  மேலளவு - மேல் மட்டமானது, ஒத்து -
சமமாகி,   உடன்  -  அங்ஙனமானவுடனே,  விரிந்து  -  விசாலித்து,
செம்பொன்  -  சிவந்தபொன்  போன்ற  கதிர்களை, ஈன்று - பெற்று,
மேலோர்  -  பெரியோர்களது,  கால்,  பாதத்தில்,  உற  - பொருந்த,
வணங்குவாரில் - வீழ்பவர்களைப்போல், கமலத்தில் - தாமரைப்பூவில்,
இறைஞ்சி - வணங்கி  (அதாவது தலை சாய்ந்து),  காய்த்த - காய்த்து
விளைந்தன;  பூகம்  -  பாக்குமரமானது,  நீலம்  -  நீலமணியினதும்,
நற்பவழம்  -  நன்மையான  பவழத்தினதும்,  முத்தின் - முத்தினதும்
(நிறத்தையுடைய),  கழுத்தவாய் - கழுத்தினையுடையனவாய் (அதாவது:
கழுத்தில் முத்தனைய மலரும், நீலமணியை நிகர்த்தகாயும், பவளத்தை
நிகர்த்த  பழமுமுடைய   பாளைகளை  யுடையனவாய்),   நிறைந்த -
நிறைந்தன, எ-று.

      (பாக்குப்பாளையில் முத்துக்களைப்போன்ற பூவும், நீலமணியைப்போன்ற
காய்களும், பவழம்போன்ற பழங்களுமுள்ளனவாதலின் அதற்கு இம்மூவகை
நிறங்களும் சொல்லப்பட்டன).                                        (15)

 16. சொற்பழி யிலாமை யானுந் தூயநல் லொழுக்கி னானு
    மிற்பிறப் போம்ப லானு மெள்ளற்பா டின்மை யானு
    நற்றவர்க் கீத லானு நாதன்சீ ரோத லானுங்
    கற்புடைக் காமல் வல்லி யார்களே போலு மூர்கள்.

     (இ-ள்.)   ஊர்கள்   -   அத்தேசத்தினூர்கள்,    சொற்பழி -
பழிச்சொற்கள்,   இலாமையானும்   -   இல்லாததினாலும்,   தூய  -
பரிசுத்தமாகிய,     நல்லொழுக்கினாலும்    -    நல்ல    நடத்தை
யிருக்கின்றமையாலும்,   இல்பிறப்பு   -   இல்வாழ்க்கையிலுயிர்களை,
ஓம்பலானும்  -  காப்பாற்றுதலாலும்,  எள்ளற்பாடு   -   இழிதொழில்
(இகழ்ச்சி),   இன்மையானும்  -  இல்லாததினாலும்,   நற்றவர்க்கு  -
நன்மையாகிய தவத்தையுடைய யதிகளுக்கு,  ஈதலானும் - ஆஹாராதி
தனங்களைச் செய்வதாலும், நாதன் - சர்வக்கிய