பக்கம் எண் :


104மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.) (அவ்வாறு சொல்லி மேலும்)  இதற்குமுன்  -  இதற்கு
முன்னால்,   போன   -   நீங்கிப்போன,   நான்கு பிறப்பில் - நாலு
ஜன்மங்களில், இவ்வீரன் - இச்சஞ்யந்தன், செய்கை - பொறுமையாகிற
காரியத்தை, மதித்து - மனத்திலெண்ணி, அவன் - அவ்வித்துத்தந்தன்,
பிறவிதோறும்   -    அந்த    நாலு  பிறப்புக்களிலும், வயிரத்தால் -
வயிரபாவத்தினால்,  (அநேக துன்பங்களைச்செய்து), வானத் துய்த்தான்
- (இச்சஞ்சயந்த    முனியை)    தேவலோக    மடையும்படியாகவுஞ்
செய்தான்,    அதற்கெலாம்   -  அப்படி அவன் செய்ததற்கெல்லாம்,
செய்வது  -  உன்னால் செய்யப்படுவது, என்கொல் - என்னவிருந்தது,
அருந்தவன் -  இச்சஞ்சயந்தன், இவன்றன் தீமையால் - இவன் செய்த
துன்பத்தால்   (அதாவது :  அதனை    ஸஹித்த  குணத்தினின்றுமே
கருமங்கள் விலகி),   திரிந்து   வாரா  -    திரும்பி வாராமையாகிய,
கதிக்கணின்றான்   -    சாஸ்வத   கதியில் சேர்ந்து நிலைபெற்றான்,
கண்டதுண்டோ - இதை நீ அறிந்ததுண்டோ, எ-று.             (79)

220. இன்றிவன் செய்த தெல்லா முறுதியே யிறைவற் கென்று
    நின்றிடும் புகழை வித்தி நெடும்பழி விளைத்துக் கொண்டான்
    அன்றியு மிவன்செய் துன்பம் பொறுத்ததா லகதி புக்கான்
    ஒன்றியிவ் விரண்டின் மிக்க தொன்றுண்டோ வுரகர் கோவே.

     (இ-ள்.) உரகர் கோவே - தரணேந்திரனே!, இன்று -இப்போது,
இவன்    -    இவனால்,  செய்ததெல்லாம்    -     செய்யப்பட்ட
பொல்லாங்கெல்லாம், இறைவற்கு - சஞ்சயந்த பட்டாரகற்கு, உறுதியே
- உறுதியானதே,   (இதனால்),  என்றும் - எப்பொழுதும், நின்றிடும் .
நிலைநிற்கும்படியான,    புகழை    -    கீர்த்தியை,       வித்தி -
அவருக்குண்டுபண்ணி,    நெடும்பழி    -   நீங்காத பழிச்சொல்லை,
விளைத்துக்கொண்டான் - இவன் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டான்,
அன்றியும் - அது வல்லாமலும், இவன் செய்துன்பம் -  இவன் செய்த
தீமையை, பொறுத்ததால்  - சகித்ததினாலே, அகதி - மோட்சகதியை,
ஒன்றி    - பொருந்தி,    புக்கான்  -   சஞ்சயந்தன் அடைந்தான்,
இவ்விரண்டின் - இந்தத் தீமை நன்மைகளைக் காட்டிலும், மிக்கது -
மேலானது,     ஒன்றுண்டோ    -     ஒன்றிருக்கின்றதோ?    (நீ
யோசித்தறிவாயாக,) எ-று.                                (80)

221. என்றலு முரக ராச னிறந்தநாட் பிறவி தோறுஞ்
    சென்றிவன் செய்த வெல்லாஞ் செப்பெனத் தேவராசன்
    நின்றநின் வெகுளி வெப்பங் கருணையா லவித்து நின்று
    வென்றவர்ப் பணிந்துவாநீ வினவிய துரைப்ப னென்றான்.

     (இ-ள்.)என்றலும் - என்று ஆதித்யாபன் சொன்னமாத்திரத்தில்,
உரகராசன் - தரணேந்திரனானவன், இறந்தனாள் - சென்ற நாள்களில்,
பிறவிதோறும்   சென்று  - முன்  ஒவ்வொரு சன்மங்களிலும் சென்று,
இவன்    -     இவ்வித்துத்தந்தன், செய்தவெல்லாம்   -    செய்த
தீமைகளையெல்லாம், செப்பென - சொல்லக்