குஞ்சரங் கடாவி வாழுங் குடிகளும் நூற்றுக்
கோடி
யிஞ்சிமா நகர மிவ்வா றியற்கையா லியன்ற தொன்றே.
(இ-ள்.) வாயில் - (அந்நகருக்கு)
கோபுரவாயிலை யுடைய மஹா
வழிகள், அஞ்சு நூற்றிரட்டி - ஆயிரமாகும், பூழை
- க்ஷுல்லகத்
துவாரங்கள், ஏழுநூறு - ஏழுநூறாகும், துஞ்சிலா - நீங்குதலில்லாத,
பலி - பலி பூஜையை, பெய் - இடும்படியான, பீடம் - பலிபீடங்கள்,
ஆயிரம் - ஆயிரமாகும், சதுக்கம் - சதுஷ்கங்கள்,
(அதாவது
நாற்சந்திகளும்,) அன்ன - அத்துணையே, குஞ்சரம் - யானையை,
கடாவி - செலுத்தி, வாழும் - வாழுகின்ற, குடிகளும் - குடிகளும்,
நூற்றுக்கோடி - நூறுகோடியாகும், இஞ்சி - மதில் சூழ்ந்திராநின்ற,
மா - பெரிய, நகரம் - வீதசோகமென்னும் அப்பட்டணமானது,
இவ்வாறு - இப்பிரகாரமான, இயற்கையால் - ஸ்வபாவத்தால், இயன்றது
- இயைந்துள்ளதாகிய, ஒன்று - ஒன்றாகும், எ-று. (28)
வேறு.
29. சுந்தரம் மலர்களெண்ணெய் சுண்ணந்தாது குங்குமஞ்
சந்தனக் குழம்புமேற் பரந்து பாடி சூழ்ந்தக
ழந்தரத் தருக்கனை யணிந்துசூழ் கிடந்ததோ
ரிந்திர தனுவின்வண்ண மென்னதன்ன தாகுமே.
(இ-ள்.) அகழ்
- (அந் நகரத்தைச்சூழ்ந்த) அகழானது,
(மாதர்கள் ஸ்நானஞ்செய்வதால்), சுந்தரம் - அழகிய,
மலர்கள் -
(அவர்களணிந் திராநின்ற)
புஷ்பங்களும், எண்ணெய் -
எண்ணெய்களும், சுண்ணம் -
கந்தப்பொடிகளும், தாது -
புஷ்பதாதுக்களும், குங்குமம் - குங்குமப்பொடியும், சந்தனக்குழம்பு -
சந்தனக்குழம்பும், மேல் - ஜலத்தின்மேல், பரந்து - படிந்து, பாடி -
பட்டினத்தை, சூழ்ந்த - சூழ்ந்திராநின்ற (தோற்றம்),
அந்தரத்து -
மத்தியில், அருக்கனை - சூரியனை, அணிந்து - தரித்து, சூழ்கிடந்தது
- வளைந்து கிடந்ததாகிய, ஓர் -
ஒப்பற்ற, இந்திரதனுவின்
- இந்திரதனுசினுடைய, வண்ணம் - வடிவமானது,
என்னது -
எத்தன்மைத்தோ, அன்னது - அத்தன்மையது, ஆகும்--, எ-று. (29)
30. கிடங்கிடைத் தடங்கள்சூழ்ந்து கேடுதோற்ற மின்றியே
மடங்கன்மொய்ம்பின் வானவர்க்கும் மீதுபோ கொணாமதில்
தடங்கடல் மரைத்தலத் தரையுஞ்சூழ மானவர்க்
கடந்திடா வகையினின்ற நாகந்தன்னைக் காட்டுமே.
(இ-ள்.) கிடங்கு
- அகழியினுடைய, இடை - உட்பக்கதில்,
தடங்கள் - விசாலமான மைதானத்தால், சூழ்ந்து - சூழப்பெற்று, கேடு
- கெடுகையும், தோற்றம் - உண்டாதலும், இன்றி -
இல்லாமல்,
மடங்கல் - சிங்கம் போன்ற, மொய்ம் |