பின் - பராக்கிரமத்தையுடைய, வானவர்க்கும்
- தேவர்களுக்கும்,
மீதுபோகொணா - மேற்செல்லமுடியாத (உயரமானதாய்ச் சமைந்த),
மதில் - மதிலானது, தடம் - விசாலம் பொருந்திய, கடல் - புஷ்கரவர
சமுத்திரமும், மரைத்தலத்தரையும் - புஷ்கரவர
த்லீபத்தின்
வெளிப்பாதியாகிய இடமும், (அதாவது : அத்தீபத்தின் பாதி பூமியும்,)
சூழ - தன்னைச் சூழும்படி, மானவர்
- மனுஷியர்களால்,
கடந்திடாவகையின் - தாண்ட முடியாத விதத்தில், நின்ற - இராநின்ற,
நாகந்தன்னை - மானுஷோத்தர பர்வதத்தின் தன்மையை, காட்டும் -
(நிகராகக்காட்டிக் கொண்டிருக்கும், எ-று. (30)
31. திக்கயம் மலைகள்போற் சிறந்துநின்ற கோபுரங்க
ளொக்குமா ளிகைநிரைக் குலமலைக ளொத்தன
மிக்கமா சனஞ்செல்வீதி சீதையாதி யாறன
சக்கரன்றன் மாளிகையு மேருவென்ன தன்னதே.
(இ-ள்.) கோபுரங்கள்
- அம்மதிலிற் கோபுரங்கள், திக்கயம்
மலைகள் போல் - திக்கஜ பர்வதங்களைப்போல,
சிறந்து -
அழகுடையனவாகி, நின்ற - இரா நின்றனவாம்; மாளிகை நிரை
-
உப்பரிகையின் வரிசைகள், குலமலைகள் - குலகிரிகளை, ஒத்தன -
நிகர்த்தனவாம்; மிக்க மாசனம் - மிகுதியாக மஹா ஜனங்கள், செல் -
(எப்போதும்) செல்லும், வீதி - வீதிகள், சீதை யாதி ஆறன -
சீதா
சீதோதா முதலாகிய மஹா நதிகளுக்குச் சமானமுள்ளவையாம்;
சக்கரன்றன் - அரசனது, மாளிகை - அரண்மனையானது, மேரு -
மஹா மேருவானது, என்னது - எத்தன்மைத்தோ,
அன்னது -
அத்தன்மைத்தாகும், எ-று.
இவ்விரண்டு
பாடல்களாலும், நகரின்றன்மை, உலகின்
பாகத்தன்மைக்குப் பொருத்தமாகச் சொல்லப்பட்டது. உலகின் தன்மை
இந்தப் புராணத்தில் சிற்சில விடங்களில் சொல்லப்பட்டிருக்கின்றதைத் தெரிந்துகொள்க.
(31)
32. முகிற்கணங்கள் பொன்மலையை மொய்த்தயானை போன்மொய்ப்ப
பகற்கிடை கொடாதசெம்பொன் மாளிகைப் படிந்தன
வகிற்புகைய ளாயநீர் மதத்தருவி போன்றன
துகிற்கணங்க ளந்நகர் மதிமறுத் துடைக்குமே.
(இ-ள்.) பொன்மலையை -
மகம்மேரு பருவதத்தை, மொய்த்த -
சூழ்ந்த, யானைபோல் - யானைகளைப்போல், பகற்கு - சூரியனுக்கு,
இடை கொடாத - நடுவில் வழிகொடாதுயர்ந்த, செம்பொன் - சிவந்த
பொன்னாலாகிய, மாளிகை - இராஜமாளிகையில், முகிற் கணங்கள் -
மேகக்கூட்டங்கள், படிந்தன - சேர்ந்திரா நின்றன; அகிற்புகையளாய -
அகிற்புகையைக் கலந்திராநின்ற, நீர் - (அம்மாளிகையினின்றும் கீழே
சொரியும்) ஜலத்திரள்கள், மதத்து அருவி - மதஜலமாகிற |