னின்றும் நீங்குகின்றதும், பொருள்
- பரிக்கிரஹ வஸ்துக்களை,
வரைதல் - மிதம் பண்ணுவதும், (ஆகிய இந்த அஹிம்ஸா, ஸத்திய,
அஸ்தேய, பிரம்மசரிய, பரிமித பரிக்கிரகமென்னும்
பஞ்சாணு
விரதங்களும்), மத்தம் - கள்ளும், மது
- தேனும் புலைசு -
மாம்ஸமும், (ஆகிய இந்த மது மத்திய மாம்ஸங்களை), உணவில் -
உண்பதினின்றும், நீங்கல் - நீங்குகின்றதும், பெரிய
- பெரிதாகிய,
திசை - திக் விரதமும், தண்டம் -
அனர்த்த தண்டவிரதமும்,
இருபோகம் வரைந்தாடல் - போகோப போகங்களை
மட்டும்
பண்ணுகிற போகோப போக பரிமாண விரதமும், (ஆகீய குணவிரத
மூன்றும்), மரீஇய - சேர்ந்திரா நின்ற,
சிக்கை நான்கும் -
தேசாவகாசிகம் ஸாமாயிகம் ப்ரோஷதோபவாஸம் அதிதிஸம் விபாக
மென்னும் நாலுவிதமான சிக்ஷாவிரதமும், (ஆகிய
இவை -
இந்தத்வாதச விரதங்கள், மனையறத்தார்
- இல்வாழ்க்கை
தர்மத்தையுடையவர்களின், சீலம் - பொதுவான சீலமாகும் (என்றும்
கூறினான்), எ-று.
இவற்றில் பஞ்சாணு விரதமும்,
மது மத்திய மாம்ஸ நிவிர்த்தியும்
விரதமென்றும், மூலகுணமென்றுஞ் சொல்லப்படும். பின்னால்
சொல்லப்பட்ட குணவிரத திரயமும், சிக்ஷாவிரத
சதுஷ்டயமும்
சேர்ந்து சீலாச்சார ஸப்தகமென்று சொல்லப்படும்.
இவைகளைப்
பதார்த்த ஸாரம் ஸம்யம் மார்க்கணை என்னும்
அதிகாரத்தில்
விரிவாகக் காணலாம்.
(133)
மூன்றாவது :
பத்திரமித்திரன் அறங்கேள்விச் சருக்கம் முற்றுப்பெற்றது.
________ |