359. .......... குணமறிவு வடிவுகுடிப் பிறப்பு
பாலங்கையுடை யவர்க்கலது புகழ்ச்சியினி தடையா
இலங்குமனை யாளும்பொரு ளில்லவிடத் திகழு
மலங்கல்வரை மார்பபொரு ளாதலினி யழியேல்.
(இ-ள்.) அலங்கல் - அசையுமாலையை யணிந்திராநின்ற, வரை
மார்ப - விசாலித்த பர்வதம் போன்ற மார்பையுடைய குமாரனே!,
குலம் - நல்லகுலமும்,பெரியகுணம் - நற்குணமும்,அறிவு - ஞானமும்,
வடிவு - நல்லவடிவும், குடிப்பிறப்பு - உயர்குடிப்பிறப்பும், புகழ்ச்சி -
கீர்த்தியும், பொலம் - பொன்னை, கையுடையவர்க்கு - கையில்
இருப்பாக
(ஸ்திதியாக) உடைத்தானவர்களுக்கு,அல்லது - அல்லாமல்,
இனிது - இனிதாக, அடையா - அடையமாட்டா, பொருள் - திரவியம்,
இல்லவிடத்து - இல்லாதவிடத்தில், இலங்கு - விளங்காநின்ற,
மனையாளும் - பெண்சாதியும், இகழும் - புருஷனை இகழ்ச்சி
செய்வான் (மதிக்காள்), ஆதல் - ஆகையினால், பொருள் -
கைவசமாயுள்ள பொருள்களை, இனி - இனிமேல், அழியேல் - நீ
அழிக்காதே, (என்று சொன்னாள்), எ - று. (3)
360. காதன்மிகு தாய்மொழியி லாதரமொன் றின்றிப்
போதரவெ ணாதுபொருண் முழுதுமவ னீயக்
கோதமெரி போன்றவனைக் கொல்லும்படி சூழ்ந்து
தீதுதனக் காக்கிமனஞ் சிதைந்தொழுகும் வழிநாள்.
(இ-ள்.) (அவ்வாறு சொல்லியும்) காதன்மிகு - வாஞ்சை மிகுந்த,
தாய்மொழியில் - தனது தாயின் சனத்தில், ஆதரமொன்றின்றி - பிரீதி
சிறிதும் இல்லாமல், போதரவு - (அப்பொருளைக்) காப்பாற்றுதலை,
எணாது - நினைக்காமல், பொருண்முழுதும் - தன்னுடைய திரவிய
முழுவதையும், அவன் - அந்தப் பத்திரமித்திரன், ஈய -
இரப்போர்க்குக் கொடுத்துவிட, கோதம் - குரோதத்தினால்,
(தாயானவள்) எரிபோன்று - அக்கினிக்குச் சமானமாகி, அவனை -
அக்குமாரனை, கொல்லும்படி - கொலை செய்யும்படியா, சூழ்ந்து -
நினைத்து, தீது - பொல்லாங்காகிய பாககர்மத்தை, தனக்கு- தனது
ஆத்மனுக்கு, ஆக்கி - உண்டுபண்ணி,மனம் - மனதானது, சிதைந்து -
கெட்டு, ஒழுகும் நாள் வழி - செல்கின்ற காலத்தில், எ - று.
‘வழி நாள்?
என்பதை, ‘நாள் வழி? என மாற்றவேண்டும்; வழி - இடப்பொருளைக்
காட்டும் ஏழனுருபு.
361. ஆங்கவன்றன் சொன்மறுத்த வழற்சியினும் பொருள்க
ணீங்கவெழு மார்த்தத்தினு மவ்வுடம்பு நீத்துப்
|