பக்கம் எண் :


18மேருமந்தர புராணம்  


 

    மானவேன் மன்னர் கோமான் மந்திரச் சாலை யாதி
    ஏனைய பிறவு மிவ்வா றியம்புதற் கரிய வன்றே.

     (இ-ள்)  ஆனை  -  யானையும்,  தேர் - இரதமும்,  குதிரை -
குதிரைகளும்,   நிற்கும் - இருக்கும்படியான,   இடம் - சாலைகளும்,
படையடைக்கும்   -   ஆயுதங்கள்   வைக்கும்படியான,   சாலை -
ஆயுதச்சாலைகளும்,   சேனை - சேனைகளையுடைய,   மாவேந்தர் -
பெரிய  அரசர்களும்,   தெவ்வர் - சத்துரு  இராஜாக்களும்,   தரு -
கொடுக்கப்பட்ட,  திறை  -  கப்பப்பணத்தை,  காணும் -  கொடுக்கப்
பார்க்கும்படியான,   சாலை   -   பொக்கிஷ  சாலையும்,  மானம் -
அபிமானத்தையுடைய,   மன்னர் கோமான் - இராஜாதி இராஜனுடைய,
மந்திரச்சாலை - ஆலோசனை  சபையும்,  ஆதி - இவை  முதலாகிய,
ஏனைய - மற்றைய, பிறவும் - இன்னும் அநேகங்களும், இயம்புதற்கு -
சொல்வதற்கு, அரியன - அருமையானவைகளாம், எ-று.         (37)

 38. காமவே ளனையர் மைந்தர் காவியங் கண்ணி னாரும்
    பூமக ளிலங்கும் வீரர் போர்ப்புலிக் குழாங்கள் போல்வார்
    தாமவெண் குடையி னானுஞ் சக்கரன் றன்னை யொக்கும்
    வாமஞ்சூழ் கமலஞ் சங்கின் வண்கையார் வணிக ரெல்லாம்.

     (இ-ள்)  மைந்தர் - புருடர்கள்,   காமவேளனையர் - மன்மதன்
போன்ற   அழகினை   யுடையவர்கள்,   காவி  -  உத்பலம்போன்ற,
கண்ணினாரும் - கண்களையுடைய  ஸ்திரீகளும்,  பூமகள் - இலக்ஷ்மி
தேவிக்குச்சமானமானவர்களாவார்;  இலங்கும் - விளங்குகின்ற, வீரர் -
வீரபுருடர்கள்,  போர்  -  யுத்தத்தில்,  புலக்குழாங்கள்  போல்வார் -
புலிக்     கூட்டங்களுக்குச்     சமானமாவார்கள்;         தாமம் -
மாலையையணிந்திராநின்ற,வெண் - வெள்ளையாகிய, குடையினானும் -
குடையையுடைய    அரசனும்,    சக்கரன்றன்னை    யொக்கும்  -
தேவேந்திரனுக்குச்        சமானமாவன்;      வணிகரெல்லாம்   -
வர்த்தகர்களெல்லாரும், வாமம்  -  அழகாக,  சூழ் - சேர்ந்திராநின்ற,
கமலம்  -  பதுமமும்,  சங்கின் - சங்கமுமாகிய  (ரேகைகளையுடைய
அல்லது,  நிதிகளையுடைய),  வண் - வளப்பம்பொருந்திய, கையார் -
கையை யுடையயவர்களாவர், எ-று.                          (38)

 39. மாலையுஞ் சாந்தும் பஞ்ச வாசமும் வழங்கு வாரும்
    சாலியி னடிசி லுண்பார் தமர்களுக் கூட்டு வாரும்
    வேலைநல் லுலகம் விற்கும் விழுப்பொருள் வாங்கு வாரு
    மாலையந் தோறு மைமை யமர்ந்துசெய் வாரு மானார்.

     (இ-ள்)   (இன்னும்  அங்குள்ளார்)   மாலையும்  -  பூமாலை
முதலியவையும்,  சாந்தும் - சந்தனமும்,  பஞ்சவாசமும் - பஞ்சவாசத்
திரவியங்களும்,   வழங்குவாரும்  -  ஒருவருக்கொருவர்  கொடுத்துக்
கொள்கின்றவர்களும், சாலியினடிசிலுண்