பக்கம் எண் :


206மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

   உளங்கொண்ட வமைச்ச ராதி சூழவந் தூர்கோள் வட்டத்
   திளந்திங்க ளாகிப் பூர சந்திர னிருந்திட் டானே.

   (இ-ள்.)   (அப்படியிருக்கும்போது)   இளஞ்சிங்க    வேற்றை -
இளமையாகிய  ஆண்  சிங்கத்தை,  சூழ்ந்த - சூழ்ந்திருந்த, இரும் -
பெரிதாகிய,    புலிப்போதகம்போல்    -  புலிக்குட்டிகளைப்போல,
களங்கண்டு -  யுத்த  களத்தைப் பார்த்து,  முழங்கும் - கர்ஜிக்கின்ற,
யானை    -    யானைகளையுடைய,   காவலகுமரர்    -     பல
தேசத்தரசகுமாரர்கள்,   வந்து   -  இவ்விடத்தில்  வந்து,  சூழ்ந்தார்
சூழ்ந்துகொண்டார்கள்,    பூரசந்திரன்   -  பூர்ணசந்திர    அரசன்,
உளங்கொண்ட - தன்  மனதிற்குச் சரியாய் ஆய்ந்தமைத்துக்கொண்ட,
அமைச்சராதி   -  மந்திரியர்  முதலானவர்கள்,  சூழக தன்மைச்சூழ,
ஊர்கோள்    வட்டத்து   -  பரிவேடத்தினது   வளைவில்  உள்ள,
இளந்திங்களாகி  -  பால சந்திரனுக்குச் சமானமாகி, இருந்திட்டான் -
இருந்தான், எ-று. (87)

வேறு.

444. காமத் திருவின் மஞ்சரியுங் கமலத் திருவுங் கடலமிர்தும்
    பூமொய்த் தெழுந்த விளங்கொடியும் புனமென் மயிலு
                                          மனையார்கள்
    வாமப் புருவச் சிலைகோலி மலர்க்கண்ணம்பு தெரிந்துமனம்
    காமக் கோமான் வில்லிகள்போற் கடிதார் மன்னன்
                                          புடைசூழ்ந்தார்.

    (இ-ள்.)    (அச்சமயத்தில்)    காமத்திரு -     மன்மதனுடைய
செல்வமாகிய    ரதிதேவியையும்,  இன்  -   இனிய,  மஞ்சரியும்  -
பூங்கொத்தையும், கமலத்திருவும் - தாமரைப் புஷ்பத்தில் வீற்றிருக்கிற
இலக்ஷ்மி  தேவியையும், கடல் - க்ஷீரசமுத்திரத்திலுள்ள, அமிர்தும் -
அமிர்தத்தையும்,  பூ - புஷ்பங்கள், மொய்த்து - நெருங்கி, எழுந்த -
உண்டாகிய,  இளங்கொடியும் - இளமையாகிய  புஷ்பக்கொடியையும்,
புனம்  -  காட்டில்  வசிக்கின்ற, மெல்  -  மிருதுவாகிய,  மயிலும் -
மயிலையும்,  அனையார்கள் -  ஒத்த ஸ்திரீமார்கள்  வாமம் - அழகு
பொருந்திய,  புருவம்  -  புருவமாகிற, சிலை  -  வில்லை, கோலி -
வளைத்து,  மலர் -  நீலோற்பல  புஷ்பம்  போன்ற,  கண் - தங்கள்
கண்களாகிற,  அம்பு - பாணங்களை, மனம் - மனதினால், தெரிந்து -
ஆராய்ந்தெடுத்து   ஏறிட்டெய்து,   காமக்கோமான்  -  ஆசைக்குத்
தலைவனாகிய    மன்மதராஜனது,    வில்லிகள்போல்    -    வில்
வீரர்களைப்போல,      கடி   -   வாசனையையுடைய,     தார் -
மாலையையணிந்த,   மன்னன்  -   பூர்ணசந்திர  அரசனது, புடை -
பக்கத்தில், சூழ்ந்தார் - சூழ்ந்து கொண்டார்கள், எ-று. (88)

வேறு.

 445. பார்த்திபர் தருதிறை கொண்டு பைம்பொனா
     லார்த்தியிம் மண்ணினை யமிர்தச் செப்பென