பக்கம் எண் :


 நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம் 259


 

வேறு.

560. தீக்கதிச் செலவினை நீக்கிச் சிந்தையின்
    நோக்கிலாப் பொருளையு நோக்கி யின்பத்தை
    வீக்கியிம் மாற்றினை நீக்கி வீட்டினை
    யாக்குநல் லறத்தினை யமர்ந்து செய்மினே.

     (இ-ள்.) சிந்தையில்  - தியானத்தால்,  தீக்கதி - துர்க்கதிகளில்
(அதாவது :   நாரகதிரியக்குகளில்),   செலவினை - செல்லும்படியான
ராகாதி    விபாவங்களை,    நீக்கி    -   விலக்கி,   நோக்கிலா -
இந்திரியங்களாலறிய   முடியாத,    பொருளையும்,   அமூர்த்தமாகிய
ஆத்மாதித்திரவியங்களையும்,   நோக்கி   - (மதிஜ்ஞான ஸ்ரீதஜ்ஞான
பூர்வகமாய்     ஸ்வஸம்வேதன       பிரத்தியக்ஷ      ஞானத்தால்
நிஜாத்மருசிலக்ஷணமாய்ப்)  பார்த்து,  இன்பத்தை - ஆத்மஸுஹத்தை,
வீக்கி    - நிலையாக  உண்டுபண்ணி, இம்மாற்றினை    -    இந்த
ஸம்ஸாரத்தை, நீக்கி - விலக்கி, வீட்டினை - மோக்ஷத்தை, ஆக்கும் -
உண்டாக்கும்படியான,   நல்லறத்தினை   -   நன்மையாகிய ஸ்வதர்ம
ஸ்வரூபமாகிய  ரத்தினத்திரயத்தினை, அமர்ந்து - விரும்பி, செய்யுமின்
- யாவரும் செய்யுங்கள், எ-று.

     இவ்வாறு   கூறியதனால்,  ஸ்வஸ்வரூப  பாவத்தில் (அதாவது :
பரமார்த்த பாரிணாமிகத்தில்) பொருந்துங்கள்; அதுவே பரமோபாதேய
மென்பது பெறப்படும்.                                    (107)

ஐந்தாவது :

நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம் முற்றுப்பெற்றது.