பக்கம் எண் :


260மேருமந்தர புராணம்  


 

ஆறாவது

மன்னனுந்தேவியும் மைந்தனுஞ்
சுவர்க்கம்புக்க சருக்கம்

______

 561. வெற்றிவேல் வேந்தனும் வேந்தன் றேவியுங்
     கொற்றவக் குமரரும் கோவை யெய்தினார்
     மற்றிந்த நிலத்திடை வந்து நால்வரு
     முற்றன வுரைப்பன்கே ளுரக ராசனே.

     (இ-ள்.)    உரகராசனே    -    தரணேந்திரனே!,   வெற்றி -
ஜயத்தையுடைய  வேல் - வேலாயுதத்தைக் கையில் தரித்த, வேந்தனும்
- ஸிம்மஸேன  மஹாராஜனும், வேந்தன் - அவ்வரசனுடைய, தேவியும்
-  பட்டத்தரசியாகிய     இராமதத்தையும்,     கொற்றவக்குமரரும் -
இராஜகுமாரர்களாகிய   ஸிம்மச்சந்திர   பூர்ணசந்திரர்களும்  (ஆகிய
இந்நால்வரும்),   கோவை   -  (தங்களுடைய ஞானபரிணதிக்குத்தக்க
வரிசையாகத்)   தேவருலகத்தை,   எய்தினார்  - அடைந்து மகர்த்திக
தேவரானார்கள், மற்று - பிறகு,  நால்வரும் - அந்த  நாலுபேர்களும்,
இந்த   நிலத்திடை  -   இப்பூமியில்,  வந்து  -  வந்து,   உற்றன -
அடைந்தவைகளை,    உரைப்பன்  -  சொல்லுவேன்,  கேள்  -  நீ
கேட்பாயாக, எ-று.                                        (1)

 562. பாகரப் பிரபனாம் பாவை யாயுகஞ்
     சாகரத் துள்ளது பதினை நாளென
     நாகரிற் பிரிவெனா நடுங்கிற் றாற்றவும்
     பாகரப் பிரபையுட் பாரி சாதமே.

     (இ-ள்.)    பாகரப்   பிரபனாம்  -  பாஸ்கரப் பிரபனென்னும்
பெயரையுடைய    மஹர்த்திக    தேவனாகிய,   பாவை  -  பூர்வம்
இராமதத்தையாயிருந்த    பெண்ணுக்கு,    உள்ளது  -  உள்ளதான,
ஆயுகம் - ஆயுஷ்யமாகிய,  சாகரத்து  -  பதினாறு  கடலில்,  (மீதி)
பதினைநாளென  -  பதினைந்து  நாள்களென்றிருக்கும்போது, நாகரில்
- தேவர்களினின்றும்,  பிரிவு  -  இத்தேவனுக்குப் பிரிவாகும், எனா -
என்று,    பாகரப்    பிரபையுள்    -   அந்தப்    பாஸ்கரப்பிரபை
விமானத்திலிராநின்ற,  பாரிசாதம்  -  கற்பகவிருட்சமானது, ஆற்றவும்
- மிகவும், நடுங்கிற்று - சலித்தது, எ-று.                       (2)

 563. கற்பகஞ் சலிப்பது கண்ட தேவரும்
     மற்றவர் சிந்தையு ணடுங்கி வாடினார்