பக்கம் எண் :


 மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 261


 

     கற்பகத் தொடையலுங் கண்ட மாலையும்
     பொற்பழிந் தணிகளும் மாசு போர்த்தவே.

     (இ-ள்.) (அவ்வாறு) கற்பகம் - கற்பகவிருட்சமானது, சலிப்பது -
சலிக்கின்றதை,  கண்ட  -  பார்த்த, தேவர் - ஸாமான்ய தேவர்களும்,
மற்றவர் - மற்றுமுள்ள பரிவாரதேவர் தேவியராதியாரும், சிந்தையுள் -
மனதில்,   நடுங்கி   -   பயந்து,  வாடினார் - வாட்டமடைந்தார்கள்,
கற்பகத்தொடையலும்  -  (இந்தப் பாஸ்கரப்பிரனணிந்திருந்த) கற்பகப்
பூமாலையும், கண்டமாலையும்  -  இவனது  கழுத்திலணியப்பட்டிருந்த
கண்டமாலையும்,    பொற்பழிந்து   -   அழகழிந்து,  அணிகளும் -
மற்றுமுள்ள   ஸஹஜாபரணாதிகளும்,  மாசுபோர்த்த  - களங்கத்தால்
மூடப்பட்டன, (அதாவது : மாசடைந்தன), எ-று.                (3)

 564. மதியொளி பதினைநா டோறு மாய்ந்திடா
     விதியொளி மாசுறிஇ வீயு மாறுபோன்
     முதிர்மதி யனையொளி மூர்த்தி மாசுறீக்
     கதிர்கழன் றிடுவது கண்டு வாடினான்.

     (இ-ள்.)  ஒளி - பிரகாசம் பொருந்திய, மதி - சந்திரன், பதினை
நாடோறும் - (அபரபட்சப்பிரதமை  முதல்  அமாவாசை பரியந்தமான)
பதினைந்து நாள்கள் தோறும், விதி - கிரமமாக  (நாளுக்குநாள்), ஒளி
- கிரணம், மாசுறீஇ - மாசுற்று  (அதாவது : ஒளிமழுங்கி),  மாய்ந்திடா
- ஒளிகுறையப்பட்டதாகி, வீயு மாறுபோல் -  (அமாவாசைத் தினத்தில்
தன்னொளியே   யில்லாமல்)   தேய்ந்து  போவதுபோல், முதிர்மதி -
பூர்ணச்சந்திரனை,   அனை   -  நிகர்த்த,  ஒளி - ஜோதியையுடைய,
மூர்த்தி  -  இந்தப் பாஸ்கரப்  பிரபதேவனது சரீரம், மாசுறீ - களங்க
முற்று, கதிர் - கிரணமானது, கழன்றிடுவது - நீங்கிப்போவதை, கண்டு
- நாளுக்குநாள்   தெரிந்து,   வாடினான்   -   அந்தப்   பாஸ்கரப்
பிரபதேவன் வாடுதலடைந்தான், எ-று.                        (4)

 565. தேவனா யமளியைச் செறிந்த நாண்முத
     லோவிலா வகையவ னுற்ற வின்பமோர்
     தாவமாய்த் திரண்டுவந் தடுவ தொக்குமா
     மூவைநா ளகவையின் முடிந்த துன்பமே.

     (இ-ள்.)  மூவைநாள் - பதினைந்து  நாளாகிய,  அகவையின் -
ஆயுகக்கடையில்,  (அத்தேவனுக்கு)  முடிந்த - ஏற்பட்ட,  துன்பம் -
மாணாந்திக   துக்கமானது,   தேவனாய்   -    தேவனாகித்தோன்றி,
அமளியை  -  உபபாதசயனத்தில்,  செறிந்த - சேர்ந்த,  நாள்முதல் -
அந்நாள்  முதலாக,  ஓவிலா - நீங்காத,  வகை - விதமாய், அவன் -
அத்தேவன்,      உற்ற      -     இதுவரையில்      (அதாவது :
பதினாறுகடலாயுபரியந்யம்)     அடைந்த,    இன்பம்    -    தேவ
சௌக்கியமெல்லாம், ஓர் தாவமாய் - ஒரு காட்டுத்