தீயாகி, திரண்டு வந்து - சேர்ந்து வந்து, அடுவது -
சுடுவதை, ஒக்கும்
- நிகர்ப்பதாயிருந்தது, எ-று.
(5)
வேறு.
566. சூகர மாகித் தோன்றித் துயருறு முயிர்க டுன்பத்
தாகர மாகி நின்ற வவ்வுடம் பிடுத லாற்றா
நாகருக் கிறைவ ராகி விண்ணினை நண்ணி வீழ்வார்
சோகமுந் துயரு நம்மாற் சொல்லலாம் படிய தொன்றோ.
(இ-ள்.) சூகரமாகி - பன்றியாகி,
தோன்றி - பிறந்து, துயருறும் -
துக்கமடைகின்ற, உயிர்கள் - ஜீவர்களும், துன்பத்து - துக்கத்துக்கு,
ஆகரமாகி - இருப்பிடமாகி, நின்ற - இராநின்ற,
அவ்வுடம்பு -
அச்சரீரத்தை, இடுதல் - விடுவதற்கு, ஆற்றா
- தாளாமல்
வருத்தமுடையனவாகும், (அப்படியிருக்க), நாகருக்கு - தேவர்களுக்கு,
இறைவராகி - அதிபர்களாகி, விண்ணினை - தேவலோகத்தை, நண்ணி
- அடைந்து, வீழ்வார் - இறந்துபோகின்றவர்களுடைய, சோகமும் -
மனவருத்தத்தையும், துயரும் - துக்கத்தையும், நம்மால் - நம்மாலே,
சொல்லல் - சொல்லுதல், ஆம்படியதொன்றோ - ஆகும் விதமான
தொன்றாகுமோ, (சொல்லல் முடியாது), எ-று.
(6)
567. கானெரி கவரப் பட்ட கற்பகம் போல வாடி
வானவ னிருந்த போழ்தின் வந்துசா மான தேவர்
தேனிவ ரலங்க லாயித் தேவர்தம் முலகிற் சின்னாள்
வானவ ரிருந்து பின்னை வழுத்தரல் மரபி தென்றார்.
(இ-ள்.) (அவ்வாறாகவே)
கான் எரி - காட்டுத் தீயால்,
கவரப்பட்ட - கிரகிக்கப்பட்ட, கற்பகம்
போல - கற்பக
விருட்சத்தைப்போல, வாடி - வாடுதலுற்று, வானவன் - பாஸ்கரப்
பிரபதேவன், இருந்த போழ்தில் - இருந்த காலத்தில், சாமானதேவர்
- சாமான்ய தேவர்கள், வந்து - இம்மஹர்த்திக தேவனிடத்தில் வந்து,
தேனிவர் - வண்டுகள் விரும்புகின்ற,
அலங்கலாய் -
மாலையையணிந்த மஹர்த்திக தேவனே!, இத்தேவர் தம்முலகில்
-
இந்தத் தேவர் லோகத்திலே, வானவர் -
அவதரித்த தேவர்கள்,
சின்னாளிருந்து - தங்களுக்குள்ள ஆயுஷ்ய காலமாகிய
சில
நாட்களிருந்து, பின்னை - (ஆயுஷ்ய பிரமாணம் முடிந்த)
பிறகு,
வழுத்தரல் - இறந்து போவதாகிய, இது - இச்செய்கை, மரபு - பாரம்
பரிய வரிசையாகும், என்றார் - என்று போதித்தார்கள், எ-று.
(7)
568. கணங்கணந் தோறும் வேறா முடம்பினைக் கண்டு பின்னு
மணந்துடன் பிரிந்த வற்றுக் கிரங்குவார் மதியி
லாதார் |