பக்கம் எண் :


332மேருமந்தர புராணம்  


 

ஒரு அந்தர் முகூர்த்த காலத்தில், நீங்க - நீங்கிவிட (உடனே), கவ்வை
- துன்பத்தை,   செய் - செய்யும்படியான,  வினைக்கு - கருமத்திற்கு,
காலன்   போல - இயமனைப் போல, புவ்வாணி - அபூர்வகரணலப்தி
பரிணாமமானது,  தோன்றி  - உண்டாகி,  நின்று - அந்தர்முகூர்த்தம்
நின்று,   செவ்வியில்   -   நன்மையில்லாத பாப கருமங்களினுடைய,
திதியினோடு   -   ஸ்திதியோடு,   பாகத்தை   - அனுபாகத்தையும்,
சிதைக்கும் - கெடுக்கும், (அதுவல்லாமலும்), எ-று.

     இதுவும் அடுத்த செய்யுளுங் குளகம்.                  (155)

 716. விதியினிக் கேபத் தோடு குணந்தசங் கமத்தைச் செய்யா
     புதியவாம் விதியின் பாகந் திதியைமுன் போலக் கட்டா
     பதரறு பலன்க ளாறைப் பயந்தபுவ் வாணி நீங்க
     வதிசயம் பலவுஞ் செய்யு மணியட்டி விசோதி தோன்றா.

     (இ-ள்.)   விதியின்    -    கிரமத்தினால்,  நிக்கேபத்தோடு -
குணநிக்ஷேபத்தோடு,   குணந்தசங்கமத்தை - குணசங்கிரமணத்தையும்,
செய்யா  -  செய்து,   புதியவாம்  -  முன்சொல்லாத புதியனவாகிய,
விதியின் -  புண்ணிய வினைகளினுடைய, பாகம் - அனுபாகத்தையும்,
திதியை  -  ஸ்திதியையும், முன்போல - முன்னே  சொல்லியதுபோல,
கட்டா  -  உயர்த்திக் கட்டியும், பதரறு - குற்றமற்ற, பலன்களாறை -
இப்படி   ஆறுவிதமான   பலன்களை,   பயந்த  - உண்டுபண்ணிய,
புவ்வாணி   -   அபூர்வகரண   பரிணாமமானது,  நீங்க - நீங்கிவிட,
அதிசயம்   பலவும் - அதற்குமேல்  ஆத்மனுக்குப் பல அதிசயமான
குணங்களை,   செய்யும்   -    செய்யும்படியான,     அணியட்டி -
அநிவர்த்திகரணமென்கிற,   விசோதி - பரிணாமமானது,  தோன்றா -
தோன்றி, எ-று.

     இதுவும் அடுத்த பாடலும் குளகம்.                     (156)

 717. பந்தசந் தத்தைச் சார்ந்த நால்வகைப் பயத்தை யாக்கா
     வொன்றலா வினைக்குக் கட்ட மோகட்ட மொருங்கு செய்யா
     நின்றுடன் குணத்தச் சேடி நிக்கேவந் தன்னை யாக்கா
     குன்றிய வினைகட் கென்றுங் குணந்தசங் கமத்தைச் செய்யா.

     (இ-ள்.)   ஒன்றலா   -   இரண்டாகிய, வினைக்கு - புண்ணிய
பாபமென்னும்   வினைகளுக்கு,    பந்தசந்தத்தை   -  பந்தத்தையும்
ஸத்துவத்தையும்,   சார்ந்த - சேர்ந்திராநின்ற, நால்வகைப் பயத்தை -
நாலுவகைப்  பலனை, (அதாவது : பாபவினைகளுக்கு ஸத்துவத்தையும்
உதீரணையையும்    புண்ணிய     வினைகளுக்கு      பந்தத்தையும்
உதயத்தையும்),   ஆக்கா - செய்து, (அதுவல்லாமலும்), உக்கட்டம் -
புண்ணியவினைக்கு   உத்கிருஷ்ட    ஸ்திதியையும்,   மோகட்டம் -
பாபவினைகளுக்கு அபக்ருஷ்ட  ஸ்திதியையும், (அதாவது : ஜகன்னிய
ஸ்திதியையும்), ஒருங்கு - ஒருங்கே,