ஞானமும், காட்சி - ஸம்மியக்தரிசனமும், ஓதிய வகையில்
- முனிவரன்
சொன்ன விதமாக, தோன்ற - உத்பன்னமாக,
உலப்பிலா -
கெடுகையில்லாத, (அதாவது : நிச்சயமாகிய), பொருளை -
ஜீவாதி
திரவியங்களை, கண்டான் - யதாஸ்வரூபமாகத் தெளிந்தான், (அதனால்
அப்போது), ஏதமொன்று - யாதொரு
குற்றமும், இலாமைக்கு -
இல்லாமையாகிய ஸ்வபாவ குணத்தையடைவதற்கு, ஏது - காரணமாகிய
தவத்தை, இயற்றுவன் - செய்வேன், என்று - என்று, சொன்னான் -
கிரணவேக மகாராஜன் சொன்னான், எ-று. (166)
727. விரிதிரை வீந்து தோன்றல் வெள்ளம்வெந் துயரம் வேலை
திரிபுவ னத்தி னெல்லைத் திமிர்கணாற் கதிக ளாசை
யெரிபுரி வடவை யின்பந் தீபமாற் றாழி நின்றிவ்
வுரையெனுந் தோணி சித்தி பத்தனத் துய்க்கு மென்றான்.
(இ-ள்.) (அவ்வாறு
சொல்லி மேலும்), மாற்றாழி
-
ஸம்ஸாரமாகிற சமுத்திரத்தில், வீந்து - இறந்து, தோன்றல் - பிறத்தல்
(அதாவது : இறந்து பிறக்கிறதாகிய இந்த ஜனனமரணமே),
விரி -
விசாலித்த, திரை - அலைகளாம், வெம் - வெப்பம்
பொருந்திய,
துயரம் - துக்கமானது, வெள்ளம் - ஜலப்பிரவாக வருத்தமாகும்,
திரிபுவனத்தின் - மூன்றுலோகத்தினுடைய, எல்லை - முடிவானது,
வேலை - கரையாகும், நாற்கதிகள் - சதுர்க்கதிகள்,
திமிர்கள் -
மேடுகளாகும், ஆசை - ஆசையானது, எரிபுரி - உஷ்ணத்தைச்
செய்கின்ற, வடவை - வடவாமுகாக்கினியாகும், இன்பம் - சுகமானது,
தீபம் - ரத்னதீபம் முதலான தீவுகளுக்குச் சமானமாகும், (ஆதலின்),
நின்று - இப்படிப்பட்ட ஸம்சார சமுத்திரத்திலிருந்து, இவ்வுரையெனும்
- முனிவனால் கூறியருளப்பட்ட இந்தத் தர்ம வசனமென்னும், தோணி
- படகானது, சித்திபத்தனத்து -
(தன்னில் ஏறுகின்றவர்களை)
மோட்சமென்னும் நகரியில், உய்க்கும் - கொண்டுபோய்ச் சேர்க்கும்,
என்றான் - என்றும் கிரணவேக மகாராஜன் பாவனை
செய்தான்,
எ-று. (167)
728. போகமும் பொருளு மெல்லாம் மேகமுந் திரையும் போலும்
சோகமுந் துயரு மாக்குந் தொடுகடற் சுற்ற மாகும்
நாகமும் நிலமும் பெற்றால் நாலைந்து நாளில் வேறாம்
யோகியாய் வினையை வெல்வ னிறைவவென் றுரைசெய் தானே.
(இ-ள்.) (பின்னரும் அவன்
அம்முனிவரை நோக்கி), போகமும்
- போ கோப போகங்களும், பொருளும் - ஐசுவரியாதிகளும், (ஆகிய),
எல்லாம் - யாவும், மேகமும் -
ஆகாயத்தில் தோன்றும்
மேகமண்டலமும், திரையும் - ஸமுத்திரத்துண்டாகிய அலைகளையும்,
போலும் - நிகர்க்கும், (அதாவது : அவற்றைப்போல சீக்கிரம் அழிந்து
போகப்பட்டனவாகும்), தொடு - சேர்ந்திராநின்ற, சுற்ற |