பக்கம் எண் :


 மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 339


 

மாகும்   -   பந்துஜன்    ஸமூகங்களாகிற,  கடல் - சமுத்திரமானது,
சோகமும்  - வருத்தத்தையும், துயரும் - துக்கங்களையும், ஆக்கும் -
உண்டுபண்ணும்,    நாகமும்    -      தேவருலகமும்,   நிலமும் -
பூமிராஜ்யாதிகளும்,    பெற்றால் - அடைந்தாலும் (அவை), நாலைந்து
நாளில் - நாலைந்து   தினங்களில் (அதாவது : கொஞ்சக் காலத்தில்),
வேறாம்      -    நீங்கிவிடும்,       (சம்ஸாரமானது      இப்படி
அநித்தியமாயிருப்பதினால்),   இறைவ - முனிசிரேஷ்டரே!, யோகியாய்
- நான்     தபத்தைக்  கைக்கொண்டு மஹா முனியாகி, வினையை -
கருமங்களை,    வெல்வன்    -     ஜெயிப்பேன், என்று - என்றும்,
உரைசெய்தான் - சொல்லினான், எ-று.                      (168)

 729. அருந்தவந் தானஞ் சீல மறிவனற் சிறப்பு நான்குந்
     திருந்திய குணத்தி னார்க்குச் சேதிக்கு வீதி யாகு
     மருந்தவ மரிது சீல மாற்றுவ தாங்கித் தானம்
     பொருந்திநற் சிறப்போ டொன்றிப் புரவல செல்க வென்றான்.

     (இ-ள்.)  (அதுகேட்டு முனிவரன்) புரவல - அரசனே!, அரும் -
செய்தற்   கரிதாகிய,  தவம் - தபஸும்,  தானம் - சதுர்விததானமும்,
சீலம் - சீலாச்சாரமும்,   அறிவனற் சிறப்பு - ஸர்வஜ்ஞனைக்குறித்துச்
செய்யும் பூஜையும், (ஆகிய),  நான்கும் - இந்த நான்கும், திருந்திய -
திருத்தமாகிய,          குணத்தினார்க்கு      -      ஸம்மியக்துவ
குணத்தையுடையவர்களுக்கு, சேதிக்கு - மோட்சத்திற்கு, வீதியாகும் -
வழியாகும்,     அரும்    - அரிதாகிய, தவம் - தபமானது, அரிது -
செய்தற்கரியது,  (ஆகையால்), சீலம் - சீலாச்சாரங்களில், ஆற்றுவ -
சக்திக்குத்   தக்கவாறு     பொருந்தியவைகளை மாத்திரம், தாங்கி -
தரித்து,   தானம்  -  தானங்களையும், பொருந்தி - மனம்பொருந்திப்
பாத்திரங்களில்   செய்து,    நற்சிறப்போடொன்றி    -   அரஹந்த
பரமாத்மாவின்  நல்ல நிச்சய குணஸ்துதிகளோடும் சார்ந்து, செல்க -
நீ செல்வாயாக, என்றான் - என்று சொன்னான், எ-று.        (169)

 730. அருளிய மூன்று மென்கண் வினையற வெறிந்து வீட்டைத்
     தருமெனி லரிய வந்தத் தவத்தினாற் பயனு மில்லை
     அரியவத் தவத்தி னன்றிப் பிறப்பினைக் கடக்கொணாதே
     லருளிய தென்கொ லென்ன வருந்தவ னமைக வென்றான்.

     (இ-ள்.) (அதைக்கேட்டு மன்னன் முனிவனை நோக்கி), அருளிய
- இப்போது  சொல்லியருளப்பட்ட,  மூன்றும்  -  (தவம் நீங்கலாகிய,
சீலம், தானம்,   பூஜையாகிய)  மூன்றும், என்கண் - என்னிடத்தாகிய,
வினையினை   -   ஸகல  கரு மங்களையும், அற - நீங்கும்படியாக,
எறிந்து  -  கெடுத்து,  வீட்டை  -   மோட்சத்தை, தருமெனில் - நீர்
பின்னுரைத்தபடி  கொடுக்குமென்றால்,  அரிய - மகா அருமையாகிய,
அந்தத் தவத்தினால் - அத்தபசினால்,  பயனும் - வரப்பட்ட பலனும்,