இல்லை - அம்மோக்ஷத்திற்கு
மேலானதில்லை, (அப்படியிருக்க
முன்னே தவத்தினால் பிறப்பறுமென்றுஞ் சொன்னீர்; அங்ஙனம்), அரிய
- பெறுதற்கரிதாகிய, அத்தவத்தினன்றி - அந்தத் தபசினாலல்லாமல்,
பிறப்பினை - ஜனனமாகிற இச்சம்சாரத்தை, கடக்கொணாதேல் - நீங்கி
மோட்சமடைதல் முடியாதிருக்குமானால், அருளியது - இப்பொழுது
அத்தபம் வேண்டியதில்லையென்று எனக்குத்
தாங்கள் கூறி
அருளியது, என்கொல் - என்ன காரணம், என்ன - என்று கேட்க,
அருந்தவன் - அரிதாகிய
தபசையுடைய முனிவரன்,
(அக்கிரணவேகனை நோக்கி), அமைக
- நீ தபத்திலே
பொருந்துவாயாக, என்றான் - என்று சொன்னான், எ-று. (170)
731. செங்கயற் சருங்கட் செவ்வாய்ச் சீறடிப் பரவை யல்குற்
கொங்கைகள் வீங்கத் தேய்ந்து நுடங்கிடைக் கொடிய னார்கள்
வெங்களி யானை வேந்தன் விரதியாந் திருவை மேவ
வங்கவ னுமிழப் பட்ட தம்பலம் போல வானார்.
(இ-ள்.) (அவ்வாறு முனிவரன்
கூறிய பின்பு), வெம் - வெப்பம்
பொருந்திய, களி - கெர்வத்தையுடைய, யானை
- யானைக்குத்
தலைவனாகிய, வேந்தன் - கிரணவேக மகாராஜன், விரதியாந் திருவை
- வைராக்கியமென்னும் லட்சுமியை, மேவ -
பொருந்த, செம் -
சிவந்த, கயல் - கெண்டை மீன்போன்ற, கரும் -
கறுத்த, கண் -
கண்களையும், செவ்வாய் -
சிவந்த வாயையும், சீறடி -
சிற்றடிகளையும், பரவை - விசாலித்த, அல்குல் - அல்குலினையும்,
கொங்கைகள் - ஸ்தனங்கள், வீங்க - கதிக்க, (அதனால்), தேய்ந்து -
குறைந்து, (மெல்லியதாகி), நுடங்கும்
- அசைகின்ற, இடை -
இடையையும், (உடைய), கொடியனார்கள் -
புஷ்பக்கொடிக்குச்
சமானமாகிய தேவிமார்கள், அங்கவன் -
அவ்விடத்தில்
அவ்வரசனால், உமிழப்பட்ட
- மென்று வாயினின்றும்
துப்பிவிடப்பட்ட, தம்பலம் போல - தாம்பூலத்தைப்போல, ஆனார் -
(அவனுக்கு) ஆகினார்கள், எ-று. (171)
732. பருமணி முடியுந் தோடும் பட்டமுங் குழையும் பூணுந்
தருமணி யாரந் தாம மங்கதஞ் சன்ன வீரம்
அருவிலைப் பட்டும் விட்ட வரசனால் முனியப் பட்ட
பரிசனம் போலச் சாயை யிழந்துபோய் வீழ்ந்த
வன்றே.
(இ-ள்.)
(மேலும் அக்கிரணவேகனால்), விட்ட
-
நீக்கிவிடப்பட்ட, பரும் - பெருத்த, மணி - இரத்தினத்தாலிழைத்துச்
செய்யப்பட்ட, முடியும் - கிரீடமும், தோடும்
- கர்ணத்தோடும்,
பட்டமும் - நெற்றிப்பட்டமும், குழையும் - கர்ண குண்டலமும், பூணும்
- மற்றுமுள்ள வாபரணங்களும், திரு - அழகிய, மணியாரமும்
-
முத்தாஹார இரத்தினஹாரங்களும், தாமம் - பூமாலை பொன்மாலை
முதலியவைகளும், அங்கதம் - வாகுவலயங்களும், சன்ன வீரம்
-
வென்றிமாலையும், அரு |