பக்கம் எண் :


 மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 347


 

     நெருக்கியவ் வரவங் கொள்ள நின்றதம் மெய்ம்மை தம்மே
     லொருக்கிய மனத்த ராகி யுடம்புவிட் டொருங்கு சென்றார்.

     (இ-ள்.)  அருக்கனை - சூரியனை,  சனியோடு - சனியென்னும்
கிரகத்தோடும்,   செவ்வாயோடு  -  அங்காரகனோடும், அரவுதான் -
இராகுவென்னும் பாம்பானது, விழுங்கிற்றேபோல் - விழுங்கினதுபோல்,
அருக்கவேகன்றன்னோடு     -     கிரணவேக      முனிவனோடு,
ஆரியாங்கனைகடம்மை  - (ஸ்ரீதரை, யசோதரை யென்னும் இரண்டு)
ஆரியாங்கனைகளையும்,   நெருக்கி - சேர்த்து, அவ்வரவம் - அந்த
மலைப்பாம்பானது,   கொள்ள  -  அவ்வாறு உட்கொண்டு விழுங்க,
(அம்மூவரும்), நின்ற - நிலைபெற்ற, தம் - தங்களுடைய, மெய்ம்மை
தம்மேல்    -     யாதாத்மிய      குணத்தின்மேல்,   ஒருக்கிய -
ராகத்வேஷாதிகளை     விட்டு    ஒருமைப்பட்ட,    மனத்தராகி -
மனதையுடையவர்களாகி, உடம்புவிட்டு - சரீரத்தை விட்டு, ஒருங்கு -
ஒருதன்மையாக, சென்றார் - வேறு கதியில் சென்றார்கள், எ-று.

     ஓடு - இரண்டிடங்களினுங் கூட்டப்பட்டது.            (184)

 745. பாவிட்டன் மேலோர் கோபம் பணித்திலா மனத்தி னார்போய்க்
     காவிட்ட கற்பத் தீரேழ் கடல்பெற்றங் குரிசைக் கைமாப்
     பேர்பெற்ற விமானத் தின்கண் முனியற்கப் பிரப னானான்
     றீபத்தைப் புரையு மாதர் தேவர்க்குத் திலத மானார்.

     (இ-ள்.)  (அவ்வாறு சென்ற பின்), பாவிட்டன்மேல் - (இப்போது
மலைப்பாம்பாகித்  தங்களை   விழுங்கிய)    பாபிஷ்டனாகிய சத்திய
கோடன்மேல்,  ஓர் கோபம் - யாதொரு கோபத்தையும், பணித்திலா -
செய்யாத,   மனத்தினார் - மனத்தையுடைய இம்மூவர்களும், போய் -
அவ்வாறு   சரீரம்   நீங்கிப்போய்,   காவிட்டகற்பத்து  -  காபிஷ்ட
கல்பத்தில்,   ஈரேழ்கடல்   -   பதினாலு    கடற்காலம்,  பெற்று -
ஆயுஷ்யமாகப்பெற்று,   அங்கு   - அக்கல்பத்தில், உரிசைக்கைமா -
ருசகப்    பிரபையென்ற,      பேர்பெற்ற    -    பெயரையடைந்த,
விமானத்தின்கண்   -    தேவவிமானத்தில்,   (அவர்களுள்), முனி -
கிரணவேக   முனிவரன்,  அற்கப்பிரபனானான் - ரவிப்பிரபனென்னும்
மஹர்த்திக   தேவனாகப்   பிறந்தான், தீபத்தைப்புரையும் - பிரகாசம்
பொருந்திய குணத்தினால் தீபத்தை நிகர்க்கும், மாதர் - ஸ்த்ரீகளாகிய
இரண்டாரியாங்கனைகளும்,    தேவர்க்கு - அக்கல்பத்திலுள்ள  மற்ற
தேவர்களுக்கெல்லாம்,    திலதமானார்    -    திலகம்போற் சிறந்த
தேவர்களானார்கள்,    (அதாவது :     சற்குணமுள்ள    ஸாமானீக
தேவர்களாகப் பிறந்தார்கள்), எ-று.                        (185)

 746. மறுவிலாக் குணத்தி னார்போய் வானவ ராக மாயாக்
     கறுவினாற் பாந்தள் போகி நரகநான் காவ தெய்தி