யறுபதோ டிரண்ட
ரையாம் புகையுயர்ந் தெழுந்து வீழு
மறுபதோ டிரண்ட ரைவில் லுயர்ந்ததோ ருடம்பு பெற்றான்.
(இ-ள்.) (இவ்வாறு)
மறுவிலா - குற்றமில்லாத, குணத்தினார் -
குணத்தையுடைய மூவர்களும், போய் -
சரீரம் நீங்கிப்போய்,
வானவராக - தேவர்களாய்ப் பிறக்க, மாயா - நீங்காத, கறுவினால் -
த்வேஷத்தினால், பாந்தள் - மலைப்பாம்பாயிருந்த சத்தியகோஷன்,
போகி - ஆயுரவஸானத்துப்போய், நரக நான்காவது
- நாலா
நரகத்தை, எய்தி - அடைந்து, அறுபதோடிரண்டரையாம்புகை
-
அறுபத்திரண்டரை யோஜனை, உயர்ந்து - உன்னதமாகி, (அதாவது :
அவ்வளவு தூரம் மேலே), எழுந்து வீழும் - ஆகாயத்தில் மேனோக்கி
யெழுந்து தலை கீழாக விழுகின்ற, அறுபதோடிரண்டரைவில்
-
அறுபத்திரண்டரைவில், உயர்ந்தது - உன்னதமானதாகிய, ஓருடம்பு -
ஒப்பில்லாத ஒரு நரக சரீரத்தை,
பெற்றான் - அடைந்தான்,
எ-று. (186)
747. அறத்தினூங் காக்க மில்லை யென்பது மிதனை யாய்ந்து
மறத்தினூங் கில்லை கேடு மென்பது மதித்தி வர்தங்
திறத்தினே யறிந்து கொண்மின் றீக்கதிப் பிறவி
யஞ்சில்
மறத்தைநீத் தறத்தோ டொன்றி வாழுநீர் வையத்
தீரே.
(இ-ள்.) வையத்தீர் -
இப்பூமியிலுள்ளவர்களே!, அறத்தினூங்கு -
தர்மத்தைக்காட்டிலும் பெரிதாகிய, ஆக்கம்
- செல்வம்,
இல்லையென்பதும் - இல்லையென்று உலகத்தில் சொல்வதையும்,
மறத்தினூங்கு - பாபத்தைக்காட்டிலும் பெரிதாகிய,
கேடும் -
கெடுகையும், இல்லையென்பதும் - இல்லை யென்று சொல்வதையும்,
இதனை - இச்சரித்திரத்தை, ஆய்ந்து - ஆராய்ந்து, மதித்து - எண்ணி,
இவர் தந்திறத்தின் - இந்த முனிவரன் ஆரியாங்கனை
பாம்பாகிய
சத்தியகோஷன் ஆகிய இவர்களின் தன்மையால்,
(அதாவது :
முனிவன் ஆரியாங்கனை யிவர்களால் தருமபலன் சிறந்து நின்றதையும்,
பாம்பால் பாப பலன் தாழ்ந்து நின்றதையும்), அறிந்து கொண்மின் -
தெரிந்து கொள்ளுங்கள், (அவ்வாறு தெரிந்துகொண்டு), நீர் - நீங்கள்,
தீக்கதிப்பிறவி - கெட்ட கதியிற் பிறக்கும் பிறப்புக்கு,
அஞ்சில் -
பயந்தால், மறத்தை நீத்து - பாபத்தை நீக்கி, அறத்தோடொன்றி
-
தருமத்தோடு சேர்ந்து, வாழும் - வாழக்கடவீராக, எ-று. (187)
வேறு.
748. மன்னனுந் தேவியு மிளைய மைந்தனு
மின்னவ ராயினா ரினிய கேவச்சச
சென்னியி லிருந்தவச் சீய சந்திரன்
றன்வர வுரைப்பன்கேள் தரண வென்றனன். |