(இ-ள்.)
மன்னனும் - ஸிம்மசேனவரசனும், தேவியும் - அவன்
தேவியாகிய விராமதத்தையும்,
இளையமைந்தனும் -
இளையபுத்திரனாகிய பூர்ணசந்திரகுமாரனும், இன்னவராயினார்
-
இப்பேர்ப்பட்ட காபிஷ்டகல்பத்துத் தேவர்களானார்கள்,
இனிய -
இனிமையாகிய, கேவச்சச்சென்னியில் - ஊர்த்துவக்கிரைவேயகமாகிய
உபரிமோபரிமகிரைவேயேகத்தில், இருந்த - அஹமிந்திரனாயிருந்த,
அச்சீய சந்திரன்றன் - அந்த ஸிம்மசேன மஹாராஜாவின் ஜேஷ்ட
புத்திரனாகிய ஸிம்மச்சந்திரனுடைய, வரவு - வருகையை (அதாவது :
அவன் அஹமிந்திர லோகத்தினின்றும் இப்பூமியில் வந்து அவதரித்த
வரலாற்றை), உரைப்பான் - இனிமேற் சொல்லுவேன்,
தரண -
தரணேந்திரனே!, கேள் - கேட்பாயாக,
என்றனன் - என்று
ஆதித்யாபதேவன் சொன்னான், எ-று.
(188)
ஆறாவது :
மன்னனுந் தேவியும் மைந்தனும் சுவர்க்கம்புக்க சருக்கம் முற்றுப்பெற்றது.
|