பக்கம் எண் :


 வச்சிராயுதன ணுத்தரம்புக்க சருக்கம் 417


 

படியாகச்  செய்தும்,  துயரங்கள் பலவும் - இவையல்லாமலும் இன்னும்
அனேகமாகிய     துன்பங்களையும்,    செய்தார்     - (இவனுக்குச்)
செய்தார்கள், எ-று.                                       (76)

889. பாவைதா னடித்த பந்திற் பாவிதான் புகையைஞ் ஞூற்றை
    யோவிலா தெழுந்து வீழ்ந்தைஞ் ஞூறுவில் லுயர்ந்து டம்பாற்
    றாவிலாத் துன்ப முற்றான் தன்னிலை தளர்க்கொ ணாத
    வாயுவா லாங்குப் பெற்ற வாழிகா லத்தை யெல்லாம்.

     (இ-ள்.) (அப்போது),    தன்னிலை     - தனக்குக்   கட்டின
ஆயுஷ்யத்தின் ஸ்திதியை,தளர்க்கொணாத - நடுவில் நீக்கிக் குறைக்க
முடியாத,    ஆயுவால்  - நரகாயுஷ்யத்தினால், ஆங்கு - அந்த ஏழா
நரகத்தில்,     பெற்ற  - தனக்காயுஷ்ய மாகப்பெற்ற, ஆழி காலத்தை
யெல்லாம்    - கடற் காலங்கள் முழுமையும், ஐந்நூறு வில்லுயர்ந்த -
ஐந்நூறு  வில்லுன்னதமாகிய, உடம்பால் - சரீரத்தினால், பாவைதான் -
சித்திரப்பாவை போன்ற ஒரு ஸ்த்ரீயினாலே, அடித்த - அடிக்கப்பட்ட,
பந்தில்     -      பந்தைப்போல்,   பாவி    தான்   - மிகுதியான
பாபகர்மத்தையுடைய    இந்த  நாரகனானவன், புகை யைந்நூற்றை -
ஐந்நூறு  யோசனை உன்னதம், ஓவிலாது - இடைவிடாமல், எழுந்து -
நரக   பூமியினின்றும் மேலே கிளம்பி, வீழ்ந்து - தலைகீழாக வீழ்ந்து,
தாவிலா -குறையாத, (அதாவது : மிகுதியாகிய), துன்பம் - துக்கத்தை ,
உற்றான் - அடைந்தான், எ-று.

     ‘ஐந்நூற்றை" என்பதில், ஐ - சாரியை.                   (77)

890. ஆர்வத்தா லொருவ னானை யாயினா னொருவ னின்ற
     வேரத்தா னரகத் தாழ்ந்தான் விளம்பிய விலார்க ளின்ப
     பாரத்தை முடியச் சென்றார் பன்னகர்க் கிறைவ பாரா
     யார்வசெற் றங்க ளின்றிப் பகைநமக் கில்லை கண்டாய்.

     (இ-ள்.)   (இவ்வாறு),    ஆர்வத்தால்   -   அப்பிரசஸ்தராக
பரிணதியினால்,   ஒருவன்   - ஸிம்மஸேன மஹாராஜனான ஒருவன்,
ஆனையாயினான்    - முதலில்    யானையாகப் பிறந்தான், நின்ற -
அவன்பேரில்  ஏற்பட்டு நின்ற, வேரத்தால் - த்வேஷபரிணதியினாலே,
ஒருவன்    - அவனுடைய    மந்திரியாகிய சத்திய கோஷனென்னும்
ஒருவன், நரகத்தாழ்ந்தான் - நரகத்தில் பிறந்து மூழ்கினான், விளம்பிய
- இப்போது    சொல்லப்பட்ட  ராகத்வேஷ பரிணதிகள், இலார்கள் -
இல்லாதவர்கள்    இன்ப பாரத்தை - சௌக்கிய சமூகத்தில், முடிய -
முழுதிலும்,     சென்றார்    -     அடைந்தார்கள்,  பன்னகர்க்கு -
பவணலோகத்து    பவணதேவர்களுக்கு,      இறைவ  - நாதனாகிய
தரணேந்திரனே!,     நமக்கு     -    ஆத்மனாகிய நமக்கு, ஆர்வ
செற்றங்களின்றி   - ராகத்வேஷங்களே யல்லாமல், பகை - வேறொரு
பகையானது,    இல்லை   - உண்டாவதில்லை, பாராய் - இவற்றை நீ
நன்றாக யோஜித்துப்பார்,(என்று ஆதித்யாபதேவன் சொன்னான்), எ-று.

     கண்டாய் - அசை.                                  (78)

எட்டாவது :

வச்சிராயுதனணுத்தரம்புக்க சருக்கம் முற்றுப்பெற்றது.