ஒன்பதாவது :
பலதேவன் சுவர்க்கம்புக்க சருக்கம்
891. மந்திரி மன்னன் றம்மின் மாறுமா றாகிக் கீழ்மே
லிந்திய மைந்து செல்லு மெல்லையை முடியச் சென்றார்
வந்தவர் தம்மிற் கூடு மளவினின் றிளைய னாய
மைந்தனுந் தாயு முற்ற மாற்றினி யுரைக்க லுற்றேன்.
(இ-ள்.) மந்திரி - சத்தியகோஷ மந்திரியும், மன்னன் -
ஸிம்மஸேன மகாராஜனும், தம்மில் - தங்களுக்குள், (குணங்களினால்),
மாறு மாறாகி - வேறு வேறாகி, (அதாவது : ஒருவர்
குணத்திற்கொருவர் குணம் விரோதமாய் மந்திரி துர்க்குணத்தையும்
இராஜா நற்குணத்தையும் அடைந்து), கீழ் - (மந்திரியானவன் தனது
குணத்தினால்) அதோ லோகத்தில் ஏழா நரகத்திலும், மேல் -
(அரசனானவன் தனது குணத்தினால்) ஊர்த்துவ லோகத்தில்
ஸர்வார்த்த ஸித்தியும், இந்தியமைந்து செல்லும் எல்லையை -
பஞ்சேந்திரிய ஜுவன்களினால் அடையும்படியான கீழ் மேல் பிரமாண
க்ஷேத்திரங்களை, முடிய - முடிவு பெறும்படியாக, சென்றார் -
அடைந்தார்கள், அவர் - அவ்விருவர்களும், வந்து - மறுபடியும்
மத்திமலோகமாகிய இப்பூமியில் வந்து, தம்மில் - தங்களுக்குள், கூடும்
அளவில் -சேர்கின்றதற்குள், இளையனாய - குமரனாகிய, மைந்தனும் -
பூர்ணச்சந்திர புதல்வனும், தாயும் - அவனுடைய தாயாகிய
இராமதத்தா தேவியும், உற்ற - அடைந்த, மாற்று - ஸம்ஸாரப்
பிறப்புக்களை, இனி - இனிமேல், இன்று - இப்பொழுது,
உரைக்கலுற்றேன் - சொல்லத் தொடங்கினேன், (என்று
ஆதித்யாபதேவன் சொன்னான்), எ-று. (1)
892. போதொடு தளிர்கள் செற்றிப் பொறிவண்டும் ஞிமிறும் பாடத்
தாதொடு மதுக்கள் வீயுந் தாதகி யுடைய தீப
மோதிய புகைக ணானூ றாயிர முள்ள கன்று
வேதிகை யிரண்டிற் சக்க வாளத்தின் விளங்கு நின்றே.
(இ-ள்.) போதொடு - புஷ்பங்களோடு, தளிர்கள் - துளிர்களும்,
செற்றி - நெருங்கி, பொறி - புள்ளிகளையுடைய, வண்டும் - வண்டுக்
கூட்டங்களும், ஞிமிறும் - ஞிமிறினங்களும், பாட - இசைபாட,
(அதாவது : கீதம்போல் சப்திக்க), தாதொடு - பூந்தாதுகளோடு,
மதுக்கள் - தேன் துளிகளும், வீயும் - சொரிகின்ற, தாதகியுடைய -
தாதகி விருட்சங்களை மிகுதியாகவுடைய, தீபம் - தாத |